திங்கள், 14 ஜனவரி, 2019

#51 - பத்துக்கட்டளை நம்மைக் கட்டுப்படுத்தாது என்கிறீர்களா ?

#51 - *பத்துக்கட்டளை நம்மைக் கட்டுப்படுத்தாது என்கிறீர்களா?*

*பதில்*:
* பத்து கட்டளைகள் – தேவனால் கொடுக்கப்பட்டவை.
* அவைகள் *இஸ்ரவேல் ஜனங்களுக்கு* கொடுக்கப்பட்டவை (யாத். 20:2)

*உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின* உன் தேவனாகிய கர்த்தர் நானே.

10 கட்டளைகளில் சிலவற்றை இஸ்ரவேலர் அல்லாத புறஜாதியாராகிய / கிறிஸ்தவர்களாகிய நாம் *கடைபிடிக்க முடியாதவை* அல்லது – காலாவதியாகி போனவை.

உதாரனத்திற்கு - கீழே உள்ள வசனங்களை பார்க்கவும்:

யாத். 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:8-11 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;  ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;  ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். 
_*இது பொருந்தாது*_

*ஏன் இது பொருந்தாது*?

*ஓய்வு நாள் என்பது 7ம் நாள் – அதாவது சனிக்கிழமை.
Sabbath Day / யியோம் அல்சபா என்று சொல்வார்கள்*.

கிறிஸ்தவர்களாகிய நாம் – வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) தேவனை ஆராதிக்கிறோம்.   ஏன்?

1- வாரத்தின் முதல் நாளில் இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்தார் -  மாற்கு 16:9

2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள் - வாரத்தின் முதல் நாளில்  -  மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15; 33,36, யோ 20:19; 26

3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேரும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது - வாரத்தின் முதல் நாளில் -  யோ. 20:19, 26, அப். 2:1

4- சபை ஸ்தாபிக்கப்பட்டது - வாரத்தின் முதல் நாளில் அப். 2:1

5- பரிசுத்த ஆவியானவர் இறங்கினது வாரத்தின் முதல் நாளில் - அப். 20:1-4

6-அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடினது வாரத்தின் முதல் நாளில்  - அப். 20:7

7- காணிக்கை சேர்க்கும்படி கூடினது - வாரத்தின் முதல் நாளில் -  1கொரி. 16:1-3

இன்றும் *இஸ்ரவேலர்கள்* – 7ம் நாளில் – ஓய்ந்திருந்து தேவனை ஆராதிக்கிறார்கள்.

ஆனால் கிறிஸ்து நியாயபிரமாணத்தின் முடிவாய் (ரோ. 10:4) இருப்பதால் – நாம் இந்த கட்டளைக்கு கீழானவர்கள் அல்ல.

நியாயபிரமாணத்தின் படி -*7ம் நாளில் ஆராதிக்காதவன் கொல்லப்படவேண்டும்* !!

நியாயபிரமாண சட்டம் இப்போதும் இருக்கிறது என்றால் – நாம் இந்த *தண்டனையை செயல் படுத்த முடியுமா*? – ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்றும் இன்றும் நியாயபிரமாணம் நமக்கு உள்ளது என்று வாதாடுபவர்கள் – சனிக்கிழமை வராத ஜனங்களை இது வரை யாரையாவது கல்லெறிந்து கொலை செய்திருக்கிறார்களா? 

அப்படி செய்தால் அரசாங்கம் விட்டு விடுமா?  சட்ட விரோதமாயிற்றே !!  *ஒரு கட்டளையை மீறினாலும் பாவம் என்று சொல்லியிருக்க, நியாயபிரமாணம் இருக்கிறது என்று சொல்பவர்கள் சாபத்திலே வாழ்பவராகி விடுவார்களே* – கலா. 3:10, யாக். 2:10

யாத். 20:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:13 கொலை செய்யாதிருப்பாயாக.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:14 விபசாரம் செய்யாதிருப்பாயாக.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:15 களவு செய்யாதிருப்பாயாக.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:16 பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

யாத். 20:17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
_*நிச்சயமாய் எந்த காலத்திலும் பொருந்தும்*_

இந்த கட்டளைகள் – இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.
நாமனைவரும் புறஜாதியினர்.
நாம் யூதர்கள் அல்ல – கிறிஸ்தவர்கள்.
நமக்கு தலை கிறிஸ்துவே.
அவர் சொல்படி நாம் செயல்பட வேண்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக