தன்னுடைய சரீரமாய்
நம்மை மாற்றின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
செருப்பை வெளியே கழற்றி
போடுவதும், சிகரட்டை தூர எரிந்து விட்டு ஆலய கட்டிடத்திற்குள்ளே போய் பாவ மன்னிப்பை
கேட்டு நிம்மதியோடு வெளியே வந்து மறுபடியும், ஒரு தம் பற்ற வைத்து கொண்டு
போவதும் பலருக்கு பழக்கம்.
ஒரு அலங்கரிக்கப்பட்ட
வேதாகமும் எப்போதும் எரிந்து கொண்டு இருப்பது போல ஒரு சின்ன விளக்கையும் வைத்து நம்
ஆண்டவரை ஒரு சின்ன தனி அறைக்குள் அடைத்து பாதுகாப்பாக வைத்த நினைப்பில் பல பழைய கிறிஸ்தவர்கள்
இன்றும் இருக்க தான் செய்கிறார்கள்.
இருதயத்தில் ஒரு இடத்தை
கேட்ட அவருக்கு நாம் நம் வீட்டின் ஒரு பகுதியையே ஒதுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டோம்.
உள்ளே பூட்டி வைக்க
அவர் ஒரு விக்கிரகமோ, மரித்துப்போனவரோ அல்ல, ஆவியான தேவன் அவர்.
உயிரோடு ஜீவித்துக்கொண்டு
இருக்கும் தேவன் அவர்.
மனுஷன் கையால் கட்டப்பட்ட
கட்டிடங்களில் அல்ல, அவரால் கட்டப்பட்ட நாமே அவர் வசிக்கும் ஆலயம்!! (அப்
17:24)
இந்த சரீரமாகிய ஆலயத்தை
நாம் பயபக்தியோடு உண்மையோடு ஆண்டவர் உள்ளே இருப்பதை உணர்ந்து சுத்தபடுத்தி பத்திரப்படுத்தி
பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரே அதை கெடுத்துபோடுவாராம்
!! (1கொரி 3:17)
ஆரம்ப கிறிஸ்தவர்கள்
காலையில் எழுந்ததும் நேரே பூஜை ரூமுக்கு போய் அவரை தேட வேண்டாம்...இருந்த இடத்திலேயே
அவரை நினைத்து ஜெபியுங்கள்... அவர் நம் ஜெபத்தை கேட்க ஆவலோடு எதிர்ப்பார்த்துக்கொண்டு
இருக்கிறார்.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who has changed us as His own body.
Many has a habit of dropping their shoes
out, throws their cigarette before entering the Church building, declares
their sin and comes out with a tentative satisfaction. Lits up the new cigar
and goes back home !!
We still see many new/orthodox
Christians who keeps a decorated Bible and a non-stop small light glowing in
a small room, thinking that their Lord is kept inside their home safely and
securely.
Lord asked a room in our heart but we had grown up heavily so to allocate a separate room in
our House for Him !!
He is neither an idol nor a dead person
to lock him in our home. He is The God in Spirit.
He is The Living God.
He does not live in the building human
built, but He lives in the building HE built..yes we are His home !! (Acts
17:24)
We have the instruction to keep our home
(body) clean and neat as The Spirit of the Lord stays inside. Else, He “damages”
it !! (1 Cor 3:17)
Pre-Christian runs to the allocated room
in the early morning to pray to their Lord…He does not dwell inside that
room…but awaiting for your eager whispered prayer daily from your heart to
bless you.. Search Him inside your heart.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
செவ்வாய், 11 டிசம்பர், 2018
Daily Dose 12-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக