கேள்வி :
கிறிஸ்த்துவுக்குள் பிரியமான சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. எபேசியர் 6:12
மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கம் வேண்டும்
குறிப்பாக :
மாம்சத்தோடு
இரத்தத்தோடு
துரைத்தனங்களோடு
அதிகாரங்களோடு
அந்தகார லோகாதிபதிகளோடு
பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
இவற்றின் உள்ளர்த்தம் என்ன?
எந்த அடிப்படையில்
நமக்கு போராட்டம் உண்டு ?
மேற்கண்டவைகளை தாங்கள் விளக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🏼
பதில்:
அன்புள்ள சகோதரருக்கு ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
போராட்டம் (pale என்கிற கிரேக்க வார்த்தைக்கு) என்பது - சண்டை அல்லது ரெஸ்லிங் முறை விளையாட்டை குறிக்கிறது. எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும் நாம் அதையும் சட்டரீதியாக அதாவது வேதத்தின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு எதிர்கொள்ளவேண்டும் என்று பார்க்கிறோம் (1Co 9:25 -27 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். )
நாம் இப்படிப்பட்ட சண்டையை மாம்சத்தில் உள்ளவர்களிடையே நேருக்க நேராக அல்ல (அதாவது சரீரத்தில் உள்ளவர்ளை எதிர்கொள்ள அல்ல) சாத்தானோடு நமக்கு
போராட்டம் என்கிறார்.
சாத்தான்- எந்த மனிதனையும் விட மூத்தவன் - அநுபவத்தில்,
ஆகவே நாம் அவனை ஜெயிக்க வேண்டுமெனில் - அவனையே உருவாக்கின ஆண்டவரை பற்றிக்கொள்ளும் போது வெற்றியை தருகிறார்,
மாம்சத்தோடு / இரத்தத்தோடு - உறவுகள், சகமனிதர்கள், மாமிசத்தில் இருப்பவர்கள்
துரைத்தனங்களோடு / அதிகாரங்களோடு : Principalities - நாம் சரியான வகையில் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருக்க நம்முடைய மேல் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துதல் (அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல, மாறாக அவர்கள் பயன்படுத்தும் அதிகாரமே, கொலோ 2:15)
அந்தகார லோகாதிபதிகளோடு / பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு : எபே2:2
பிசாசின் அதிகாரத்திற்கு எதிர்த்து..
யோ 16:33 : என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
ரோ8:37:இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்
1யோ4:4: பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
1யோ5:4 - தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
உங்கள் கேள்விக்கு விடையளித்தேன் என்று நம்புகிறேன். இன்னும் சந்தேகமிருப்பின் கேட்கவும்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
எடி ஜோயல்
+91 8144 77 6229
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக