#45 *கேள்வி* : #45 விசுவாச துரோகம் & பாவமனுஷன் வெளிப்படும் நாள்
2 தெசலோ 2:3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
1.விசுவாச துரோகம்
2.பாவமனுஷன் வெளிப்படும் நாள்
என்பதற்கான விளக்கம்கேட்டு இருந்தீர்கள்.
*பதில் :*
1ம் நிருபத்தை தொடர்ந்து 2ம் நிருபத்தை பவுல் எழுதினார் என்று நாம் அறிந்தது. கர்த்தருடைய நாள் என்கிற கருத்தை வலியுறுத்தும் வண்ணமாக இந்த 2ம் நிருபத்தின் மைய கருத்து இருப்பதை நாம் இந்த நிருபம் முழுக்க (3 அதிகாரமும்) வாசிக்கும் போது உணர முடியும்.
*"விசுவாச துரோகம்"* என்கிற வார்த்தையை மூல பாஷையில் பார்க்கும் போது "apostasia" என்று வருகிறது. அதாவது, உண்மையை விட்டு விலகி செல்லுதல் என்று பொருள் படுகிறது.
கர்த்தருடைய நாள் வரும் முன்பு - நிச்சயமாக கிறிஸ்தவம் என்கிற பெயரில், பலர் - உண்மையை விட்டு விலகி இருப்பார்கள் என்பதை குறிக்கிறது..இக்காலங்களில் நாமே கண்கூடாக பார்த்து வருகிறோம். அவர்கள் விலகி செல்வதோடு நின்று விடாமல், மற்றவர்களை, தங்கள் வழிகளை பின்பற்றும்படி வலியுறுத்துவார்கள்.
ஆதார வசனங்கள் :- V3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், 2தெசலோ 2:5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
1தீமோ 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
2Ti 4:3 - 5 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
*"பாவமனுஷன் வெளிப்படும் நாள்"*
வசனத்தில் பாவ மனுஷன் வெளிப்படும் நாள் என்று இல்லாமல் - பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய அந்த நாள் வராது என்று உள்ளது.
அதாவது - பாவ மனுஷன் வெளிப்பட்டதற்கு பின்பு - கர்த்தருடைய நாள் / வருகை வரும் என்று சொல்லப்படுகிறது 2Th 2:2
*"யார் அந்த பாவ மனுஷன்?"*
கேட்டின் மகனாகிய பாவமனுஷன் என்று வருகிறது வசனத்தில். சாத்தான் தன் வலிமையால் அநேகரை வஞ்சிப்பான்
2Th 2:9 -12 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
நாளானது ஒவ்வொருவரின் விசுவாசத்தை வெளி கொண்டு வருகிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு மூணரை ஆண்டுகள் இருந்த போதும் - பிசாசின் வலையில் விழுந்த யூதாசை நாம் பார்க்க முடிகிறது.
யோவான் 17:12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
எது நடந்தாலும், எப்படி நடந்தாலும், எவ்வளவு நடந்தாலும் - எழுதப்பட்ட சத்தியத்திற்கு (1 கொரி 4 :6 ) மிஞ்சி எதையும் நாம் செவி சாய்க்காத படிக்கு நம் விசுவாசத்தை காத்துக்கொண்டால் - நாமும் அந்த நாளில் ஆதாயப்படுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (incl. Govt. Registration)
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 8144 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக