|
பரிசுத்த தேவன் தாமே
நம்மை ஆசீர்வதித்து பெலப்படுத்துவாராக !
சாராயமோ, பிராந்தியோ,
பீர் போன்றதோ இல்லாமல் வைன் குடிக்கிலாம்னு ஒருவர் ஷாக் குடுத்தார்.
மேற்கொண்டு ஒரு வசனத்தையும் காட்டினார்... பவுலே தீமோத்தேயுவை பார்த்து கொஞ்சம் வைன்
குடிச்சிகோன்னு சொன்னார்லன்னு காண்பித்தார் (1தீமோ5:23).
தனக்கு சாதகமா எல்லாத்தையும்
மாத்திக்கிறதுல மனிதகுலம் வெற்றி கண்டுகொள்கிறது. ஆனால் வசனமே நம்மை நியாயம் தீர்ப்பதாலே
தேவனுடைய நியாயதீர்ப்பில் ஏமாறுவோம்.
திராட்சை ரசம் சுமார்
15 சரீர நன்மைகளை கொடுக்கும். ஆனால், புளிக்க
வைத்து குடிப்பது சரீரத்திற்கு கேடு.
புளித்த பானம் மதுவாக
இருக்கிறது. அதை பருகுவது வேதாகமத்திற்கு விரோதமானது. வசனங்களை பார்க்கவும்.
எபே 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான
வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
...
1கொரி 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், *வெறியரும்*, உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லை
ஏசா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து,
மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
நீதி 23:29-32 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத்
துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப்
புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும்
இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை
நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து,
பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ
அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்,
விரியனைப்போல் தீண்டும்.
இன்னும் எத்தனை எத்தனை
வசனங்கள்.. எந்த விதத்திலும் *மதுபானம் குடிப்பது வேதத்தின் படி தவறு தான்*.
மதுபானத்திற்கு அடிமையானவர்கள்,
அதில் இருந்து மீண்டு வர வேண்டும். கர்த்தரை நாடுங்கள். அவரே இரட்சிப்பார்.
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
May The Holiest God bless us and
Strengthen us.
A person at worker’s camp said,
Christians wont drink is Arrack, Brandy, Beer but they are allowed to drink
Wine. He quoted 1Tim 5:23 that Paul instructs Timothy to drink small amount
of wine.
Human excels in manipulating anything.
Bible says The Word will judge us. We can understand anything, but it wont be
right in God’s judgement day.
Grape Juice gives appromiately 15 types
of Health benefits. But fermented juice yields perverse results.
Fermented grape juice (wine) is
alchoholic. Consuming alchohol is utterly banned in Bible. See the scriptures:
Eph 5:18 And do not get drunk with wine,
for that is debauchery, but be filled with the Spirit,
1 Cor 6:10 nor thieves, nor the greedy,
*nor drunkards*, nor revilers, nor swindlers will inherit the kingdom of God.
Isa 5:11 Woe to those who rise early in
the morning, that they may run after strong drink, who tarry late into the
evening as wine inflames them!
Pro 23:29-32 Who has woe? Who has
sorrow? Who has strife? Who has complaining? Who has wounds without cause?
Who has redness of eyes? Those who
tarry long over wine; those who go to try mixed wine. Do not look at wine
when it is red, when it sparkles in the cup and goes down smoothly. In the end it bites like a serpent and
stings like an adder.
Many more scriptures are there in Bible,
speaks against consuming alchohol. We should be refrain from it. Those who
are addicted, should come out of it. Seek the Lord, He will save you.
Eddy Joel
+91 8144 77 6229
|
திங்கள், 23 ஜூலை, 2018
Daily Dose 20-7-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக