ஞாயிறு, 10 ஜூன், 2018

Daily Dose 10-6-18


புதிய நாளின் ஆனந்தத்தை நமக்கு தரும் ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

முழு பட்டணத்திலும் 10 தேவனுடைய பிள்ளைகள் (நீதிமான்கள்) கூட இல்லாத படியினாலே  சோதோம் கொமோரா அழிக்கப்பட்டு போனது. (ஆதி 18:32 .... பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.)

நம் தேசங்கள் இப்போது சுயநலத்திலும், பெருமை பேச்சுகளிலும், விபச்சாரத்திலும், விக்கிரக வழிபாட்டிலும், துன்மார்க்கத்திலும், சட்ட விரோதத்திலும், பொய் பரப்புரைகளிலும், தவறான பாதையில் வழி நடத்தும் தலைவர்களும், தவறு என்று அறிந்தும் குருட்டாட்டமாய் பின்தொடரும் ரசிகர் (சீஷர்/விசுவாசி) கூட்டம் என்று நிரம்பி வருகிறது.

எமோரியர் அக்கிரமம் மிகுதியாவது வரைக்கும் இஸ்ரவேல் ஜனம் அடிமை தனத்தில் இருந்தது. (ஆதி 15:16 ... எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.)  எமோரியரின் அக்கிரமம் பூர்த்தியான போதோ முழு தேசமும் இஸ்ரவேலுக்கு இரையாகிபோனது.

சாப்பாட்டிற்கு உப்பு சிறிதளவு தான் தேவை. சிறிதளவு தான் நாமும் இருக்கிறோம். தேசத்தில் நாம் உப்பாக இருக்கிறோம் (மத் 5:13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்)

தேசம் மனம்திரும்ப நாம் தேவனிடத்தில் கண்ணீர் விட வேண்டும். மன்றாட வேண்டும். மறைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கண்கள் திறக்க நம் முழங்கால்கள் முடங்கட்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

Greetings in the name of the Lord who gives us the joy of the new day.

Lack of at least 10 children of God, Sodom and Gomorrah was destroyed. (Genesis 18:32 For ten righteous people it does not destroy it)

Our nation is now full of blindness, pride, Adultry, idolatry, illegality, lying propaganda, misleading leaders, and blindfolded followers (disciples/believers).

The Israel was in slavery until the fulness of the lawlessness of Amorite nation reached. (Gen 15:16 ... The Amorites lawlessness is not yet finished.) Israel occupied the lands of Amorite when Amorites were complete in their iniquity.

Volume of Salt is always required in pinches comparing the prepared food. Likewise we are minority in nation. We are salt for the land (Mt 5:13)

Let us shed tears to the Lord that our Nation repents. Let our knees be folded so the leaders/people eyes open. Like Abraham, we are to plead to our Lord for our Nation.

*Eddy Joel*
Preacher
joelsilsbee@gmail.com /+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக