செவ்வாய், 27 மார்ச், 2018

Daily Dose 27-3-18


சபைக்கு தலையாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துவை தலையாக கொண்டு இருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அவரது சபையாகிய சரீரத்தில் அங்கமாய் இருக்கிறார்கள்.

மற்றவர் சொல்வதை சரீரத்தில் உள்ள அங்கங்கள் உணர்ந்தாலும்,  கேட்டாலும் - தலை அதை ஆமோதிக்கும் வரை செயலில் இறங்காது.

அது போல, ஊர்பட்ட போதனைகளும் கற்பனைகளும் கிறிஸ்தவ நாடக நடிகர்களும் பேசும் எந்த பேச்சும் தலையாகிய கிறிஸ்து சொன்ன உபதேசத்தில் இல்லாத பட்சத்தில், சரீரமாகிய சபை எப்படி செவிசாயிக்கிறது?

நாம் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறோம் என்று வேதம் சொல்லுவதை (1பே 2:5) நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ, Head of The Church.

Those who accepted Christ as their head is part of the body of Christ, which is the Church.

Unless the instruction received from head, body will never respond to any outward feelings or sounds or senses.

If so, I do not understand how Christians can accept teachings, imaginations and false propaganda which is not even recognized or found in Christ’s teaching?

Scripture says, we like living stones are being built up as a spiritual house, to be a holy priesthood, to offer spiritual sacrifices acceptable to God through Jesus Christ. Let us not forget that.

*Eddy Joel*
+968 93215440
joelsilsbee.blogspot.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக