வெள்ளி, 24 நவம்பர், 2017

(Q&A) கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவத்தையும் போக்கும் ?

Question on Baptism 4-Jan-2016 :
 
 ஆம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் - யாருக்கு? யாரெல்லாம் அவர் கட்டளைக்கு கீழ் படிகிறார்களோ  அவர்களுக்கு மன்னிக்கபடும்..
எப்படி கீழ்படிய வேண்டும் ? - பாவங்கள் மன்னிக்க படும்படி ஸ்நானபடவேண்டும் . (அப் 22:16)

யார் ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெறுகிறார்கள்
விசுவாசம் உள்ளவர்கள் தகுதி பெறுகிறார்கள்.

விசுவாசம் என்றால் என்ன
இயேசுவை தேவனுடைய குமாரன் என்று நம்புவது விசுவாசம் (அப் 8:37)

ஞானஸ்நானம் எந்த வயதில் எடுக்க வேண்டும்
வேதாகமத்தில் வயது குறிபிடப்படவில்லை. (விசுவாசம் என்ன என்று புரிந்து கொள்ள கூடிய வயது) சிலருக்கு 30, சிலருக்கு 15, சிலருக்கு 8... நன்மை தீமை எது என்று அறியும் நிலைமயில் அவர்களுடய கணக்கு துவங்குகிறது..

எத்தனை ஞானஸ்நானம்
நமக்கு கொடுக்கபட்டது ஒன்றே ஒன்று தான் - அது பாவ மன்னிப்புக்கு என்று உள்ள ஞானஸ்நானம் மாத்திரம்.

சின்ன பிள்ளையில் எடுத்த ஞானஸ்நானம் செல்லுமா
விசுவாசம் என்ன என்று தெரியாமல் - ஞானஸ்நானம் எடுப்பதை குறித்து வேதத்தில் காண முடியாது.  ஆகவே அதற்கு நாம் அர்த்தம் கற்பிக்க முடியாது. விசுவாசம் வந்து மனம்திரும்பி ஞானஸ்நானம் எடுக்கும் போது பாவங்கள் மன்னிக்க படுகிறது. (அப் 2:37-38)

முழுகி தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா
ஞானஸ்நானம் என்ற வார்த்தை Baptiso என்ற வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு முழுகுதல் என்று அர்த்தம். மேலும் ஞானஸ்நானம் ஒரு சரீர அடக்கத்திற்கு சமமானது (ரோமர் 6:3-4) ஞானஸ்நானம் என்பது - பழைய மனுஷன் அடக்கம் பன்னப்படுவது.. ஆகவே தெளிப்பு அல்லது பக்கெட்டில் வாரிஊற்றுதல் வேதாகமத்தில் சொல்ல பட வில்லை.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக