#6- *வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் குறிக்கப்படும் "புத்தகங்கள், ஜீவ புத்தகங்கள்" என்ன? நியாயதீர்ப்பு புத்தகங்களின் அடிப்படையிலா அல்லது ஜீவபுத்தகத்தின் அடிப்படையிலா*?
*பதில்*: வெளி. 20:12-15 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
முன்னோட்டம்: வெளிப்படுத்தல் புத்தகம் ஏறக்குடைய 90சதவீதம் உருவகங்களாகவும் ஒப்பனையாகவும் அடையாளங்களால் அதாவது குறியீடுகளால் எழுதப்பட்ட புத்தகம். வெளி 1:1 (Signified).
ஆகவே எழுதப்பட்டவைகளை அப்படியே அர்த்தங்கொள்ள முடியாது. ... அதே வேளையில் 100 சதவீதம் இதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டோம் என்று யாரும் நிரூபிக்கவும் முடியாது.
*புத்தகங்கள் எவைகளை குறிக்கிறது*?
தானியேல் 7:10
எவைகள் என்று துல்லியமாக சொல்லப்படாவிட்டாலும், வேத வல்லுனர்களால் இரண்டு வகையான நம்ப தகுந்த அர்த்தங் கொள்ளமுடிகிறது.
1-எல்லா மனிதரின் செயல்களும் (நல்லதும் கெட்டதும்) எழுதப்பட்ட புத்தகம்... சங் 56:8, 139:4, 16, மல்கியா 3:16
2-கிறிஸ்துவின் மரணத்திற்கு முன்னர் மரித்த இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் நியாயபிரமாணமும், கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்னர் இருக்கும் அனைவருக்கும் புதிய ஏற்பாடும் அதாவது நாம் வைத்திருக்கும் வேதம் அங்கு சாட்சியாக இருக்கும். யோ 12:48, கலா 3:10, ரோ 2:16
*ஜீவ புத்தகத்தில் என்ன எழுதியிருக்கும்*?
இரட்சிக்கப்பட்டவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும். லூ 10:20, சங் 69:28, வெளி 21:27, யாத் 32:32-33.
மனிதர்களின் செயல்பாடுகள் இதில் எழுதப்படாது.
ஆட்டுக்குட்டியானவரின் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது. பிலி 4:3. விசுவாசத்தில் நிலைத்திருக்கும் வரை ஒவ்வொருவரின் பெயரும் இதில் இடம் பெற்றிருக்கும். வெளி 6:5
*நியாயதீர்ப்பு புத்தகங்களின் அடிப்படையிலா அல்லது ஜீவபுத்தகத்தின் அடிப்படையிலா*?
நியாயதீர்ப்பு புத்தகங்களின் அடிப்படையில் இருக்கும்.
வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்பு அடைந்தார்கள்.
வெளி. 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
2கொரி. 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
பிர. 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக