#5
ஜீவ புத்தகம் ஜனங்களை பற்றியதா அல்லது எல்லா மனிதரை பற்றியுமா? புத்தகங்களின் அடிப்படையில் நியாயதீர்ப்பு என்றால் வசனம் வெளி 20:15ன்படி ஜீவபுத்தகத்தில் எழுதப்படாதவர்கள் அக்கினி கடலில் தள்ளப்படுவார்கள் என்பதன் அர்த்தம் என்ன?
பதில்: ஜீவ புத்தகத்தில் – தேவனுடைய
மனிதர்கள் பெயர் மாத்திரம் எழுதப்பட்டிருக்கும். பிலி 4:3, வெளி
3:5,
அவரை சார்ந்திராதவர்கள் பெயர்
எழுதப்பட்டிராது. பிரமாணத்தை மீறினவர்களின் பெயர் எடுக்கப்பட்டு போகும். வெளி
22:19
யாத் 32:32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக்
கிறுக்கிப்போடும் என்றான்.
யாத் 32:33 அப்பொழுது கர்த்தர்
மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன்
பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
சங் 69:28 ஜீவபுஸ்தகத்திலிருந்து
அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே
அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
இரட்சிக்கப்பட்டவர்கள் அதாவது
தேவனுடைய ஜனங்கள் அல்லது தேவனுடைய வாரத்தைக்கு கீழ்படிந்து இருக்கிறவர்களுடைய
பெயர் மாத்தரம் ஜீவ புத்தகத்தில் எழுதப்படுவதால் ஜீவ புத்தகத்தில் பெயர்
இல்லாதவர்கள் அடிப்படையிலேயே தகுதியிழந்து விடுகிறார்கள்.
ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாத
அத்தனைபேரும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டு தங்கள் நித்திய சுகமான சமாதானமான ஜீவனை
இழக்கிறார்கள். மாற்கு 9:48
எடி ஜோயல் சில்ஸ்பி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக