வெள்ளி, 24 நவம்பர், 2017

#9 - கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத கணவன், கிறிஸ்தவளாக உள்ள தன் மனைவியை தன் மத ரீதியை பின்பற்றும்படி பிடிவாதம் பிடிக்கிறார்.

#9 - *கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத கணவன், கிறிஸ்தவளாக உள்ள தன் மனைவியை தன் மத ரீதியை பின்பற்றும்படி பிடிவாதம் பிடிக்கிறார். என்ன செய்வது? வீட்டில் சதா பிரச்சனை வருகிறது*. ஆலோசனை தரவும்.

*பதில்:*
இரட்சிக்கப்படாத கணவனிடம் வசனங்களை எடுத்துச் சொல்லி அவரை மீட்கும்படி வேதம் சொல்லவில்லை !!

அது இன்னும் கணவனுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

தன் கணவன் வசனத்திற்கு கீழ்படியாதவனாக இருக்கும்போதும் மனைவியானவள் சொந்தப் புருஷனுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

அவனுக்கு *வசனத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்ககூடாது*.
மாறாக அவனுக்கும் தேவனுக்கும் பயந்து *கற்புள்ள நடக்கையை வெளிப்படுத்தவேண்டும்*.

போதனை அவனுக்கு சொல்வதல்ல, *மனைவிகளின் நடக்கையினாலேயே* கணவன் ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவான்.

கணவனது பார்வைக்கு அலங்காரமாக இருக்க வேண்டும் என்று ஒய்யாரமாக தன்னை அலங்கரிப்பதால் பிரயோஜனமில்லை. கணவன் தன் மனைவியிடம் சாந்தமும் அமைதலையும் கீழ்படிதலையுமே எதிர்பார்க்கிறான். 1பேதுரு 3:1-4

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எந்த மனைவியும், தன் நடக்கையில் கணவனுக்கு *முற்றிலும்* கீழ்படிதலையும் அதீத அன்பையும் சிநேகத்தையும் வெளிப்படுத்தும் போது – கணவனானவன், தன் மணைவியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்து கிறிஸ்துவின் போதனைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பான்.

மனைவியானவள் தன் புருஷனுக்கு *எந்த நிபந்தனையுமின்றி* முழுமையாக கீழ்படிய வேண்டும்.  எபே.. 5:24, தீத்து 2:5, கொலோ. 3:18

மனைவியின் அன்பு – எப்படிப்பட்ட கணவனையும் மாற்றிவிடும்.

தவறு என்ற போதும் *கணவனுக்கு அறிவுரை சொன்ன வஸ்தியின் நிலைமையை* எஸ்தர் புத்தகம் அனைத்து மனைவிகளுக்கும் தெளிவான செய்தியை தருகிறது. எஸ்தர் 1:17-22

புருஷனிடம் அன்பு காட்டாத மனைவி – தேவனைத் தூஷிக்கிறாள். தீத்து 2:4

புருஷனிடம் அன்பும் கீழ்படிதலும் இல்லாத மனைவி கிறிஸ்துவிற்கு கீழ்படிகிறவளாக இருக்க முடியாது. எபே. 5:22

முதல் தலைமுறை கிறிஸ்தவருக்கு அதிகமான சவால்கள் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இக்காலங்களில்,
மனைவியானவள் தனது *கணவனுக்கு கீழ்படிவதைக் காட்டிலும்  ஆலோசகர்களாக மாறியதன் விளைவு – குடும்பத்தில் விரிசல்களும் சண்டைகளும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது*.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் : 

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக