#31 - *கெட்டவர்கள் எப்படி சந்தோஷமாக ஆசீர்வாதமாக வாழ்கிறார்கள்?*
*பதில்:* தேவன் தன்னுடைய ஜனங்கள்
கற்றுத் தேறும்படியாகவும் நல்லவர்களை பிரிக்கும்படியாகவும் அக்கிரமக்காரர்களை குறுகிய
காலத்திற்கு அழிவிற்கென்று விட்டுவைக்கிறார்.
தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றும்படியாக
கிறிஸ்துவானவர் சிலுவையில் அறையபடுவதற்கு ஒரு யூதாஸ் வேண்டியிருந்ததே !!
இந்த குறிப்பிட்ட தலைப்பில் நாம்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மல் 2:17ல் வேதம் உங்கள்
வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும்
எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச்
செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில்
அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன்
எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
மல்கியா 3:13 நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று
கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப்
பேசினோம் என்கிறீர்கள்.
மல்கியா 3:14 தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக்
கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத்
துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?
மல்கியா 3:15 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை
செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப்
பரிட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள்.
யோபு 21:30 துன்மார்க்கன் ஆபத்து
நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின்
நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
நீதி 16:4 கர்த்தர் சகலத்தையும்
தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும்
உண்டாக்கினார்.
சங் 73:3-15 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய
அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம்
அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன்
உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில்
அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை
பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள்
நாவு பூமியெங்கும் உலாவுகிறது. ஆகையால் அவருடைய
ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள்
அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும். தேவனுக்கு
அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு
உண்டோ? என்று சொல்லுகிறார்கள். இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள்
என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப்
பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவாகவே என்
இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக்
கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ,
உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
உபா 8:2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச்
சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும்,
உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா
வழியையும் நினைப்பாயாக.
ரோ 9:14-21 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி
உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச்
சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல்
உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும்
அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். மேலும்
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய
நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை
நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ
அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச்
சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு
எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட
வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று
சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு
பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக்
கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து
என்று நம்புகிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக