#33- *சிலுவையில் உள்ள கள்ளன் எவ்வாறு பரதீசு சென்றான்? ஞானஸ்நானத்திற்குப் பிறகு மட்டுமே எவரும் பரலோகத்திற்குச் செல்ல முடியும் என்று கடவுள் சொன்னபோது, சிலுவையில் இருந்த திருடனை சொர்க்கத்தில் இருக்க அவர் ஏன் அனுமதித்தார்? அவர் தனது சொந்த சட்டத்திற்கு முரண்படவில்லையா?*
*பதில்:* பாவ மன்னிப்பிற்கென்ற ஞானஸ்நானம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பின்பு சபை ஸ்தாபிக்கப்படும் போது ஏற்படுத்தப்படுகிறது. அப். 2:38, 22:16
புதிய ஏற்பாட்டு சகாப்தம் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு தான் தொடங்கியது.
எபிரெயர் 9:17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.
மேலும் சிலுவையில் மரணத்தை நோக்கி தொங்கிக்கொண்டிருந்த கள்ளன் இயேசுவை நன்கு அறிந்திருந்தான்.
*எவ்வாறு என்று பார்ப்போம்*. :
* இயேசுவை - *தேவன்* என்று உணர்ந்திருந்தான் !! லூக். 23:40
* தான் பாவம் செய்தவன் என்று ஒப்புக்கொண்டிருந்தான் !! வ41
* இயேசு குற்றமற்றவர் என்று *அறிந்து* இருந்தான். !! வ41
* இயேசுவை தன் ஆண்டவராக ஏற்றுக்கொண்டான் !! வ42
* பரலோக இராஜ்ஜியத்தை அறிந்து இருந்தான் !! வ42
* தன் வாழ்க்கை முடிந்து விட்டது, மரிக்க போகிறேன் என்று அறிந்தும், மறு வாழ்வு உண்டு என்று நம்பினான் !! வ42
* பாவங்களை பூமியிலிருந்தே மன்னிக்கும் வல்லமையும் அதிகாரமும் உள்ளவராயிருந்த கிறிஸ்து இயேசு அவனுடைய பாவத்தை மன்னித்து பரதீசுக்கு அழைத்து சென்றார் !! (மத். 9:6)
கிறிஸ்து சகல வல்லமையும் மகத்துவமும் உள்ள தேவன். ரோமர் 9:5
சிலுவையில் தொங்கி கொண்டு இருந்த கள்ளன் - ஞானஸ்நானம் எடுத்தானா, பரதீசிற்கு எப்படி போனான் ஆகவே நானும் ஞானஸ்நானம் எடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிலர் இன்னமும் நம் மத்தியில் இருக்க தான் செய்கிறார்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக