*#32- இயேசுவால் வேதாகமம் எழுதப்படவில்லை என்றும் மனிதர்களே வேதாகமத்தை எழுதியதால் அதை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார்களே?*
*பதில்* : இயேசு கிறிஸ்து எந்த
புத்தகத்தையும் எழுதவில்லை. வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களையும் எழுதியது
மனிதர்களே. எழுத வைத்தது பரிசுத்த ஆவியானவர்.
எபிரேயர், யோபு
போன்ற இன்னும் சில புத்தகங்கள் எழுதியவர் யார் என்று அதிகாரப்பூர்வமாக
அறியப்படாவிட்டாலும் அனைத்து புத்தகங்களையும் எழுத மூல காரணமாக இருந்தவர் பரிசுத்த
ஆவியானவர் என்று வேதம் சொல்கிறது.
2தீமோ. 3:16 வேதவாக்கியங்களெல்லாம்
தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;
2சாமு. 23:2 கர்த்தருடைய ஆவியானவர்
என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில்
இருந்தது.
மத். 22:31 மேலும் மரித்தோர்
உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின்
தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால்
உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
மத். 22:43 அதற்கு அவர்:
அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று
சொல்லியிருக்கிறது எப்படி?
மாற்கு 12:24 இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய
வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்?
மாற்கு 12:36 நான் உம்முடைய
சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய
வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது
பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
அப். 1:16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி
தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
ரோ. 3:2 அது எவ்விதத்திலும்
மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில்
ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
ரோ. 15:4 தேவவசனத்தினால் உண்டாகும்
பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
கலா. 3:8 மேலும் தேவன்
விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு:
உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய்
முன்னறிவித்தது.
எபி. 3:7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக்
கேட்பீர்களாகில்,
2பேதுரு 1:20-21 வேதத்திலுள்ள எந்தத்
தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி
அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே
உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த
ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
மேலும் சுமார் 1,500 வருட
காலப்பகுதியில் வெவ்வேறு எழுத்தாளர்களால் வேதாகம புத்தகங்கள் வெவ்வேறு காலங்களில்
எழுதப்பட்டன.
தேவன் தம்முடைய வார்த்தையை
படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டது.
வேதாகம புத்தகங்கள் தொடர்ந்து
எழுதப்படவில்லை. உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமான
மல்கியாவுக்கும், புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திற்கும் மத்தேயு
நற்செய்தியுடன் 400 ஆண்டுகள் கடந்துவிட்டன.
மத்தேயுவின் நற்செய்தி புதிய
ஏற்பாட்டில் முதலிடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், எழுதப்பட்ட
முதல் புதிய ஏற்பாட்டு புத்தகம் உண்மையில் கி.பி 44-49ல் எழுதப்பட்ட யாக்கோபு
நிருபம் என்றே நம்பப்படுகிறது.
புதிய ஏற்பாடு கி.பி 44 முதல் 90
அல்லது 95 வரை சுமார் 50 ஆண்டுகளில் எழுதப்பட்டவையாகும்.
ஒவ்வொரு எழுத்தாளரும் தனது
குறிப்பிட்ட புத்தகத்தை எழுத எவ்வளவு நேரம் ஆனது என்பதை அறிய முடியாது. மோசே பழைய
ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை சுமார் 40 ஆண்டுகளில் (கிமு 1445-1405)
எழுதினார்.
எழுத்தாளர்களில் அரசர்கள் உண்டு,
மீனவர்கள் உண்டு, போர்சேவகர் உண்டு, அரசாங்க அதிகாரிகள் உண்டு, இளவரசர்கள் உண்டு இப்படி
பலதரப்பட்டவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்திராமலும்
அறியாமலும் வேதத்தில் இருக்கும் எழுதப்பட்ட புத்தகங்கள் அதிகம்.
ஏறத்தாழ 40 எழுத்தாளர்கள்
தனித்தனியே சுமார் 1500 ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டிருந்தாலும் – எழுதப்பட்ட
தகவல்களில் எந்த முரண்பாடும் இல்லாததால் – அவை அனைத்தையும் 2தீமோ 3:16ல் சொன்னது
போல தேவ ஆவியானவரே எழுதினார் என்பதை நாம் மறுக்க முடியாது.
மனிதர்கள் கையால் எழுதப்பட்ட
நிருபங்களாக இருந்தாலும் அவைகள் யாவும் பரிசுத்த ஆவியானவரே எழுதியதாகையால் நாம் கீழ்படிய
கடமைபட்டிருக்கிறோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக