#30- *விசுவாசத்தோடு கேட்டால் மலைகளும் விலகும்* என்றார் இயேசு.
என் அம்மாவிற்காக நான் எவ்வளவோ ஜெபித்தேன். ஆனால் அந்த ஜெபம் கேட்கப்படவில்லை,
அதற்கு பதிலாக அவர் அம்மாவை எடுத்துக்கொண்டார். எப்படி?
*பதில்* – ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைந்து
விடும் என்று சொல்லப்பட்டது போல இது ஒரு ஒப்பனையான சொற்றொடர் லூக்கா 18:25
நிச்சயமாக, கடவுள்
நம்முடைய ஜெபங்களைத் கேட்கிறவர். ஆனால் அதன் ஜெயமோ அவருடைய விருப்பப்படி மட்டுமே
வழங்கப்படுகிறது.
1யோ. 5:14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி
கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற
தைரியம்.
என்ன முடிவு என்பதை தொடக்கத்திலேயே
அறிந்தவர் அவர். எனவே எங்கள் விருப்பப்படி கேட்க நாங்கள் அனுமதிக்கப்பட்டாலும்,
அவர் தனது விருப்பப்படி மட்டுமே பதிலளிப்பார்.
உங்கள் துக்கத்தை நிச்சயம் என்னால்
ஆத்மீகமாக உணரமுடிகிறது. இந்த இக்கட்டான கஷ்டமான சூழ்நிலையில் அமைதியாக பொருமையாக இருக்கவும்.
தேவன் நம் வாழ்க்கையில்
அனுமதித்ததை ஏற்றுக்கொள்வது அவசியமாகிறதே.
1கொரி. 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும்,
எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய
மகிமைக்கென்று செய்யுங்கள்.
கொலோ. 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச்
செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே
செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக