வெள்ளி, 24 நவம்பர், 2017

#29 - பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரா இல்லையா என்பது பற்றி ஒரு சகோதரருக்கும் இன்னொருவருக்கும் இடையே ஒரு விவாதம் நடந்தது. பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்றால் அவர் இப்போது எங்கே? விரிவாக விளக்குங்கள்.

#29 - *பரிசுத்த ஆவியானவர் ஒரு நபரா இல்லையா* என்பது பற்றி ஒரு சகோதரருக்கும் இன்னொருவருக்கும் இடையே ஒரு விவாதம் நடந்தது. பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர் என்றால் அவர் இப்போது எங்கே? விரிவாக விளக்குங்கள்.

*பதில்*: பரிசுத்த ஆவியானவர் ஒரு நபர்.
 
பரிசுத்த ஆவியானவர் தேவத்துவத்தில் ஒருவர்.
 
*அவர்:*
1) சர்வ வல்லமையுள்ளவர் - சங்கீதம் 139: 7-12
2) சர்வத்தையும் அறிந்தவர் - ஏசாயா 40: 13,14
3) கிருபையுள்ளவர் - எபிரெயர் 10:29
4) வல்லமையுள்ளவர் - ரோமர் 15:19
5) நித்தியமானவர் - எபிரெயர் 9:14
 
*பிதாவுடனும் குமாரனுடனும் உள்ளவர்*.
1) எபேசியர் 4: 4-6 ஒரே கர்த்தர், ஒரே பிதாவும், ஒரே ஆவி என்றும் பார்க்கிறோம். அவர்கள் மூவரும் தேவத்துவத்தில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
2) பரிசுத்த ஆவியானவர் குமாரனுடன் இருக்கிறார்.
a. ஏசாயா 11: 1-4
b. யோவான் 1:33
c. யோவான் 3:34
 
3) பரிசுத்த ஆவியானவர் பிதாவுடன் இருக்கிறார்.
a. ஏசாயா 48:16
b. மத்தேயு 10:19, 20
 
*பரிசுத்த ஆவியானவர் வழிபாட்டிற்கு தகுதியானவர்*.
1) அவர் செய்யும் நன்மைக்காக துதிக்கப்படத்தக்கவர். சங்கீதம் 143: 10
2) படைப்பில் அவரின் பணிக்காக நன்றி செலுத்தப்படத்தக்கவர். சங்கீதம் 104: 30
 
*பரிசுத்த ஆவியானவர் தேவத்துவத்தின் தனித்துவமான நபர்*.
அவர் ஒரு தனிப்பட்ட ஆளுமையின் பண்புகளை வெளிப்படுத்துகிறார்.
 
1) அவர் பேசுகிறார். 2 சாமு 23:2; எசேக்கியேல் 11: 5; மத்தேயு 10:20; அப். 8:29; 10:19; 13:2
 
2) அவர் செயல்படுகிறார். அப்போஸ்தலர் 8:39
 
3) அவர் வழிநடத்துகிறார். மத்தேயு 4: 1
 
4) அவர் அழைக்கிறார். அப்போஸ்தலர் 13: 2
 
5) அவர் வழிகாட்டுகிறார். யோவான் 16:13; அப்போஸ்தலர் 11:12
 
6) அவர் தடைசெய்கிறார். அப்போஸ்தலர் 16: 7
 
7) ஒரு தனித்துவமான வடிவத்தை எடுக்க முடியும். மாற்கு 1:10; லூக்கா 3:22 (உடல் வடிவம்)
 
8) அவர் பரிந்துரை செய்கிறார். ரோமர் 8:27
 
9) அவர் அறிகிறவர். 1 கொரிந்தியர் 2:11 தேவனுக்குரியவைகளை அறிவார்.
 
10) முடிவுகளை எடுக்கக்கூடியவர். அப்போஸ்தலர் 15:28
 
*அவர் தேவத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவர் பிதாவையும்  குமாரனையும் போல இவரும் தனித்துவமானவராக நிற்கிறார்*.
 
1) ஏசாயா 61: 1 மற்றும் லூக்கா 4: 21– மகனுக்கு.
2) ஏசாயா 63: 10-16 (படிக்க) - பிதாவுக்கு
3) எபேசியர் 4: 4-6; மத்தேயு 28:19; யோவான் 14:26; மாற்கு 1:10, 11
 
அவர் மனிதனுடன் ஒரு தனித்துவமான வழியில் கையாளுகிறார்:
 
உத்வேகம் மூலம்.
1) மனிதர்களை உந்துவதின் பங்கு தேவத்துவத்தில் இவருக்கு உள்ளது.
 
2) அவர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்கு உத்வேகம் அளித்தார் - 2 பேதுரு 1:21
 
3) புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களை அவர் ஊக்கப்படுத்தினார் - 2 தீமோ. 3:16, 17
 
4) அந்த வேதங்களை இன்று நாம் படிப்பதற்காக அவர் எழுதிவைத்தார்.
 
பரிசுத்த ஆவியானவர் தேவத்துவத்தில் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளார். உலகத்தோற்றத்தில் / உருவாக்கத்தில் இவருக்கு ஒரு தனித்துவமான பங்கு இருந்தது.
1) பூமியை வடிவமைப்பதற்கான பொறுப்பு. ஆதியாகமம் 1: 2
 
2) யாத்திராகமம் 31: 3; 35:21
 
3) மனிதனை உருவாக்குவதில் பொறுப்பு. யோபு 33: 4, சங்கீதம் 104: 30
 
4) லூக்கா 1:35
 
அது போலவே வேதாகமத்தை உருவாக்குவதில் அவருக்கு ஒரு தனித்துவமான வேலை இருந்தது.
1) கடவுளின் செய்தியை பரப்புவதற்கு அவர் பொறுப்பு. எண்கள் 11: 25-30
 
2) எபிரெயர் 3: 7
 
3) 2 பேதுரு 1:21
 
    a. செய்தியை- கருத்துக்களை உருவாக்குகிறது பிதாவின் பொறுப்பு – The Ideas.
 
    b. செய்தியை உருவாக்கப்பட்ட கருத்துக்களை வடிவமைப்பது குமாரனின்             பொறுப்பு – The Speech Writer
 
    c. செய்தியை வழங்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் பொறுப்பு -  The Speech Deliverer
 
அது போலவே ஆன்மீக படைப்பில் அவருக்கு ஒரு தனித்துவமான பங்கு உள்ளது.
 
1) ஏசாயா 59:21 - அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் விலகாது
 
2) அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பாவியைக் காப்பாற்ற அழைக்கிறார். வெளிப்படுத்துதல் 22:17
 
3) வேதமாக இன்று நம்மிடம் உள்ள புத்தகத்தில் கடவுளுடைய வார்த்தையையும் இரட்சிப்பின் செய்தியையும் வழங்குவதற்கு அவர் பொறுப்பு. எபேசியர் 3:3
 
4) ஆவியின் மூலமாக-ஆவியின் செய்தியால் நாம் சத்தியத்திற்குக் கீழ்ப்படிகிறோம். 1 பேதுரு 1:22
 
5) ஆவியின் போதனைகளுக்குக் கீழ்ப்படியும்போது நாம் ஆவியினால் “பிறக்கிறோம்” - யோவான் 3: 5
 
6) புதிய பிறப்பில் நாம் பங்கேற்கும்போது, ஆவியின் நியாயத்தை நாம் பெறுகிறோம் - 1 கொரிந்தியர் 6:11 -
 
7) இதன் விளைவாக, தேவனுடைய வீடு கட்டப்படுகிறது. எபேசியர் 4:12
 
8) அவருடைய பணி பிதாவிடமிருந்தும் புத்திரர்களிடமிருந்தும் வேறுபடுவதை தெளிவாக காண்கிறோம்.
 
    a. இந்தத் திட்டத்திற்கு தந்தை பொறுப்பு. எபேசியர் 3: 9-11
     
    b. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகன் பொறுப்பு. அவர், “நான் என்             சபையைக் கட்டுவேன்” என்றார். மத்தேயு 16:18.
 
    c. அந்த திட்டத்தை மனிதனிடம் செயல்படுத்துவதற்கு பரிசுத்த ஆவியானவர்     பொறுப்பு.
 
ஆகவே – பரிசுத்த ஆவியானவர் என்பவர் தனித்துவம் வாய்ந்தவர்.
அவர் ஆள்தத்துவமானவர்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/BbygVjLN3mr2yki8IstAsg

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக