ஞாயிறு, 9 ஜூலை, 2023

#1197 - இயேசு வெளிநாட்டு கடவுள். ஆகவே, அவரை நாம் ஏற்கக்கூடாது என்று பலர் சொல்கிறார்களே? என்ன பதில் சொல்வது?

*#1197 - இயேசு வெளிநாட்டு கடவுள். ஆகவே, அவரை நாம் ஏற்கக்கூடாது என்று பலர் சொல்கிறார்களே? என்ன பதில் சொல்வது?*

*பதில்* : படிப்பு நன்கு வர ஒரு கடவுள்,
குடும்பத்தில் ஐசுவரியம் சேர ஒரு கடவுள்,
பிள்ளை வரம் கிடைக்க ஒரு கடவுள்,
கோத்திரம் குலம் என்று தங்கள் தங்கள் குடும்பத்திற்கு ஒரு கடவுள்,
ஊர் எல்லையை பாதுகாக்க ஒரு கடவுள்,
தவறு செய்தவர்களை இரத்த வாந்தி எடுக்க வைக்க ஒரு கடவுள் என்று இன்னும் ஏராளமான காரணங்களை முன்வைத்து தங்கள் இஷ்டத்திற்கும் மனதிற்கும் பிடிக்கும் வகையிலும், உருவத்திலும், வண்ணங்களிலும் சொரூபங்களை உருவாக்கிக் கொள்வதால் இப்படி அவர்கள் சொல்ல தோன்றுகிறது.

*கடவுள் என்பவர்:*
*சகலத்திலும் அதிகாரம் படைத்தவராகவும்*
*சர்வ இடங்களிலும் இருப்பவராகவும்*
*சகலத்தையும் அறிந்தவராகவும் இருப்பவர்*.

இந்தியாவிற்கு மாத்திரமோ;
ஒரு சமுதாயத்திற்கு அல்லது குடும்பத்திற்கு மாத்திரமோ;
படிப்பிற்கு/வேலைக்கு/பிள்ளைபேற்றிக்கு போன்ற ”ஒரு துறைக்கு” மாத்திரமோ அதிகாரம் படைத்தவர் என்றால் அவரைக் காட்டிலும் மற்றவருக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்றாகிவிடுமல்லவா?

வானமும் பூமியும் உருவாவதற்கு முன்னமே ஆதியிலிருந்தே இருப்பவர் பிதா, வார்த்தையானவர் மற்றும் பரிசுத்தஆவியானவர். ஆதி. 1:1, யோ. 1:1-2

மனித குலத்திற்கு மீட்பை அளிக்கும்படிக்கு; (1தீமோ. 2:6)
ஆதாம் முதற்கொண்டு,
பின்னர் பிறந்தவர்களுக்கும்
விசுவாசத்தில் மரித்தவர்களுக்கும் (எபி. 9:15)
மற்றும் உலகம் அழியும் வரைக்குமான ஜனங்கள் தன்னை நம்பி ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் (1யோ. 5:11)
பரலோகம் அழைத்துச்செல்ல (யோ. 14:2)
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்;
வானத்திலிருந்து தொப்பென்று குதிக்காமலும், மரத்திலிருந்தோ, மிருகத்தின் வயிற்றிலிருந்தோ, கல்லில் இருந்தோ, உருட்டின அழுக்கில் இருந்தோ உருவாகாமல்;
நம்மை போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராகி, (எபி. 2:14)
தாயின் வயிற்றில் உற்பவித்து
இவ்வுலகத்தில் பிறந்து, வளர்ந்து,
ஜனங்களுக்கு போதித்து,
தனது தெய்வீகத்தை சகலவிதத்திலும் பூமியின் மீதும், வானத்தின் மீதும், மரணத்தின் மீதும், இயற்கையின் மீதும் நிலைநாட்டி (மத். 8:27, யோ. 12:9, லூக்கா 7:22)
நமது பாவங்களுக்காக இரத்தம் சிந்தி, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு 3ம் நாளில் உயிர்த்தெழுந்து (1கொரி. 15:2-4), 40 நாளளவும் இப்பூமியில் இருந்து (அப். 1:3) 500க்கும் மேற்பட்டவர்கள் கண்ட பின்னர் (1கொரி. 15:6),
மனிதர்களின் கண்கள் கண்டுக்கொண்டிருக்கும் போதே வானத்திற்கு ஏறிச்சென்ற (அப். 1:9-11)
*வார்த்தையானவராகிய இயேசு கிறிஸ்து சகலத்திலும் அதிகாரம் படைத்தவராகவும், சர்வ இடங்களிலும் இருப்பவராகவும், சகலத்தையும் அறிந்தவராகவும் இருக்கும் தேவன் அவர்* (ரோ. 9:5, 1தீமோ. 3:16, 1யோ. 5:20, யோ. 20:28, எபி. 1:9, தீத்து 2:13)

ஊருக்கு ஒரு கடவுள் என்ற கூற்று தங்கள் பிரியத்திற்கு அவரவர்கள் வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், கடவுள் என்பவர் ஒருவரே…
அவர் அண்ட சராசரத்திற்கும் ஒருவர் தான்.

*அதை நிரூபித்துக்காண்பித்தவர் இயேசு ஒருவரே*.

தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்த அனைவரும் மரித்தார்கள். பின்னர் அடக்கம் அல்லது எரியூட்டப்பட்டார்கள்.
இன்று வரை அவர்களில் எவரும் மரணத்திலிருந்து எழவில்லை!!
ஏனென்றால் மரணம் அவர்களை விழுங்கியது !!

இயேசு கிறிஸ்துவோ மரணத்தையும் ஜெயித்தவர்…

ஆகவே, உள்ளுர் கடவுள் என்றோ வெளிநாட்டு கடவுள் என்றோ அல்ல…
அவரே கடவுள்.

பரலோகத்திலுள்ள பிதாவானவர், இந்த வார்த்தையானவரை பூமிக்கு அனுப்பினார். எந்த மனிதனின் வித்துவிலும் பிறக்காமல் தேவனுடைய பெலத்தினால் மாம்சத்தில் பிறந்தபடியினால் அவர் யோசேப்பின் குமாரன் என்று அல்ல… தேவக்குமாரன் என்று அழைக்கப்பட்டார்.

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற தேவத்துவத்திலுள்ள மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள். பிரதானமானவராகிய பிதாவானவரை தொழுதுக்கொள்கிறோம். 1கொரி. 11:3

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
 
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :

*Q&A Book ஆர்டர் செய்ய* :

வலைதளம் :

YouTube “வேதம் அறிவோம்” :

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக