*எச்சூழ்நிலையிலும் விசுவாசத்தில் தொடர்ந்து ஓடுவோம்*
by : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
தன்னுடன் அன்போடு இருந்து,
கூடவே தினமும் உலாவி,
உண்மையான அன்பு பாராட்டி,
மனிதர்கள் தன்னை தொழுதுகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஏசா. 43:21
அவ்வாறு நடந்துவிடக்கூடாது என்பதில் பிசாசு ஆரம்பத்திலேயே
*முதல் தம்பதியை ஏவாள் மூலமாக தடை செய்தான்* (ஆதி. 3:1)
தேவன் எச்சரித்த பின்பும் கூட (ஆதி. 4:6),
*முதல் மகன் காயீன், கொலைக்காரனானான்* (ஆதி. 4:8)
*இரண்டாவது மகன் ஆபேல் கொலை செய்யப்பட்டான்*. (ஆதி. 4:8)
இருந்த போதும்,
தன் விருப்பத்தை இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்றினார் தேவன்.
நமக்கிருக்கும் சிலுவையை விட்டு இறங்கி வர சொல்லுவான் பிசாசு. (அதாவது கஷ்டங்களை உதறிவிட்டு ஓட சொல்லுவான்) மத். 27:40
கீழே குதி பார்க்கலாம் என்று ஆலோசனை கொடுப்பான் (அதாவது பொருப்புகளை தட்டி கழிக்கச்சொல்லுவான்). மத். 4:6
இரவும் பகலும் நம் கூடவே இருந்தவர்களை வைத்தே நம்மை சபிக்கவும் மறுதலிக்கவும் வைப்பான். (அன்பாய் நேசித்தவர்கள் கூட நம்மை வெறுக்க வைப்பான்) மத். 26:74
இப்படிப்பட்ட எந்த சூழ்நிலையிலும் அழைக்கப்பட்ட அழைப்பை நாம் கைவிட்டிடாமல் நம்மை காத்துகொள்ளுவோம். 1தீமோ. 6:12
தேவன் நமக்கென்று நியமித்த ஓட்டத்தில் பொறுமையாய் ஓடவேண்டும் என்பதை மறந்து போக வேண்டாம்.
முட்கள் இருக்கும், சிலுவை இருக்கும், போராட்டம் இருக்கும், வேதனை இருக்கும்..
ஆனாலும் அதையெல்லாம் கடந்து வந்தால் தான் ஜெயக் கிரீடம் கிடைக்கும். எபி. 12:2-3
நம்மை அழைத்தவர் உண்மையானவராயிற்றே. ஆகவே, சூழ்நிலைகள் நம்மை அவரிடம் இன்னும் அதிகமாய் கிட்டிச் சேர்க்கும்… எபி. 12:1
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/_es7j95j7xA
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக