*செவிகொடுப்பது குறைவு*
by : Eddy Joel Silsbee
சர்வ வல்லவருடைய நாமத்தில் வாழ்த்துகள்.
ஒருவர் பேசுவதற்கு முன்னமே அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கணிப்பது அறிவை வெளிப்படுத்துவதல்ல மாறாக அது இழுக்கை உண்டு பண்ணும். (நீதி. 18:13)
உலகமோ, முகத்தை பார்த்து உள்ளத்தை சொல்பவர்களை ஞானி என்று சொல்கிறது !!
நம்முடைய எதிர்காலத்தை சரியாய் சொல்வார்களா என்று ஜனம் ஆவலாய் அலைகிறது...
*சொல்வதை கேட்பதற்கு* நமக்கு பொறுமை இல்லை.
பல நேரங்களில் முழுவதுமாக படிக்கும் முன்னரே,
இது தெரிந்த வசனம் என்று கடந்து போய் விடுகிறோம். அதனிமித்தம் அந்த வசனத்தின் அர்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
அதினால் அந்த வசனத்தின் முக்கியத்துவத்தையும் உணர மனம் வருவதில்லை.
அங்ஙனம் வாசித்தால் செயலில் எப்படி மாற்றம் வரும்?
அதனாலேயே தெளிவாய் யாக்கோபு 1:23ல் குறிப்பிடுகிறார்.... ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் *அதின்படி செய்யாதவனானால்*, கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; என்று….
->கவனிப்பதற்கும், செவி சாய்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். கீழ்ப்படிதலும் மாறுதலும் தானாய் வரும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/G32YsmUE8Ss
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக