*#1190 - எலிசா தீா்க்கதரிசியை பிள்ளைகள் கேலி செய்கிறாா்கள். பிள்ளைகளை மன்னிக்கலாமே? ஏன் சபிக்கிறாா்? அதுவும் கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு! 42 பிள்ளைகளை கரடி கொன்று போட்டது. காரணம் விவரிக்கவும். (2இரா. 2:23-24 )*
*பதில்* : "பிள்ளைகள்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய (நாஹார்) வார்த்தையானது இளமையில் இருந்த ஆண்களைக் குறிக்கிறது. பொதுவாக இது 18 முதல் 30 வயது வரையிலான ஆண் பிள்ளைகளைக் குறிக்கிறது.
பெரும்பாலான நவீன மொழிபெயர்ப்புகள் இதில் "இளைஞர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன.
ஆகவே, வசனத்தில் நாம் காண்பது போல், *அது சிறு பிள்ளைகள் அல்ல*.
அடுத்தபடியாக, அவர்கள் எலிசாவை ஏன் கேலி செய்தார்கள்? ஏன் சாபத்துடன் எலிசா பதிலளித்தார் என்பதைப் புரிந்துகொள்ள அங்கு நடந்த நிகழ்வுகளின் சூழலை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
2 இரா. 2 இல், முந்தைய தீர்க்கதரிசி எலியாவுக்குப் பதிலாக எலிசா இஸ்ரவேலின் தீர்க்கதரிசியின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தேவன் எலியாவை ஒரு அற்புதமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பூமியிலிருந்து எடுக்கிறார் (2இரா. 2:11).
ஒரு அக்கினி ரதம் இறங்கி எலியாவை தூக்கிக்கொண்டு அழைத்துச் சென்றது.
அந்த ரதத்தை எலிசா மாத்திரம் அல்ல மற்றவர்களுக்கும் தெரிந்தது. ஏனென்றால் நிகழ்வு முடிந்த உடனேயே, அருகிலுள்ள மற்றவர்கள் எலியாவைத் தேடிச் செல்ல முன்வந்தனர். ரதம் அவரை எங்காவது அருகிலுள்ள பூமியில் இறக்கிவிட்டிருக்கும் என்று நம்பினர். 2இரா. 2:16
மேலும், 2இரா. 2:17-18 அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல், எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
ஆனாலும், எலியாவைத் தேடிச் செல்வது வீண் என்று எலிசா நன்றாக அறிந்திருந்தார்.
எனவே எலிசா, மற்றவர்களுடன் எலியாவை தேடும்படிக்கு அவர்களது குழுவில் சேரவில்லை.
பின்னர், எரிகோவில் தேடியவர்கள் தங்கள் பணி தோல்வியடைந்ததாக எலிசாவிடம் தெரிவிக்கிறார்கள். 2இரா. 2:17-18
அதற்கு எலிசா, "போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா" என்றார். அதன் பின்பு எலிசா பெத்தேலுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். (2இரா.2:23)
அந்நேரத்தில், எலிசா புறப்படுகையில், எரிகோவிலிருந்து ஒரு இளைஞர் கும்பல் எலிசாவைக் கேலி செய்யத் தொடங்குகிறது:
இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடக்கும் அதே பகுதியில் இந்த மனிதர்கள் உள்ளனர். எனவே எலியாவுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
எலிசாவிடம் அவர்கள் கோஷமிட்டதைக் கவனியுங்கள்: "மொட்டைத்தலையா *ஏறிப்போ*, மொட்டைத்தலையா *ஏறிப்போ* என்ற வார்த்தைகள்.. அந்தச் சொற்றொடரின் அர்த்தம், எலியா முன்பு மேலே சென்றது போலவே எலிசாவும் மேகங்களில் மறைந்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
தேவனுடைய தீர்க்கதரிசியின் கண்டிப்பை அவர்கள் விரும்பாமலிருந்திருக்க வேண்டும். தீர்க்கதரிசி மூலம் வழங்கப்பட்ட தேவ வார்த்தை இப்படிப்பட்டவர்களுக்கு கசப்பானதாகவே இருக்கும்.
எலியா சென்று போனதைக் கண்ட மகிழ்ச்சியில், இப்போது எலிசாவையும் அவ்வாறே காண விரும்புகிறார்கள்.
எனவே இந்த இளைஞர்கள் அப்பாவி குழந்தைகளோ பிள்ளைகளோ அல்ல.
அவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்த ஒரு பெரிய கும்பல். அவர்கள் எலிசாவைச் சுற்றி வளைத்து கேலி செய்து அவரை அச்சுறுத்தினர். மிக முக்கியமாக, தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசியை அவர்கள் நடத்திய விதத்தில் அவர்கள் தங்கள் விசுவாசமற்ற மற்றும் அவதூறான இதயங்களை வெளிப்படுத்தினர். ஆகையால், எலிசா இந்த மனிதர்களுக்கும் அவர்களுடைய பொல்லாத வழிகளுக்கும் எதிராக பேசுகிறார்.
எலிசாவின் வார்த்தைகளினால், அம்மனிதர்களைத் தாக்க தேவன் இரண்டு கரடிகளை அனுப்பினார். எலிசா காயமின்றி வெளியேறினார்.
வசனத்தைக் கவனிக்கவேண்டிய ஒரு வார்த்தை என்னவென்றால் “அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் *பீறிப்போட்டது*” என்பதாகும். அதாவது அவர்கள் அனைவரும் கொலைசெய்யப்படவில்லை, ஆனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பின்னர் ஒருவேளை சிலர் இறந்திருக்கலாம். அதை யூகிப்பதற்கான பதிவுகள் இல்லை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக