*தேவசமாதானத்தில் என்ன விசேஷம்?*
By : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.
சமாதானத்தை வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொன்னார் இயேசு கிறிஸ்து.
உலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும்படியானது அல்ல அது !! யோ. 14:27
ஆம்...
உலகம் தரும் சமாதானம்;
பல எதிர்பார்ப்புகளோடு இருக்கும்.
உங்களுடைய தன்மையை பொருத்து இருக்கும்.
உங்களுடைய தகுதியை பொருத்தும் இருக்கும்.
உங்களை அவர் எந்தளவிற்கு அங்கீகரித்தார்களோ அந்தளவில் இருக்கும்.
சூழ்நிலைக்கு ஏற்ப உங்கள் அங்கீகாரமும் மன சமாதானமும் மாறிக்கொண்டே இருக்கும்.
ஆனால், இயேசு கிறிஸ்துவோ, எப்போதும் மாறாதவராய் இருந்து, எந்த நிலைமையில் நாம் இருந்தாலும் நம்மை நேசித்து நமக்கு சமாதானத்தை தருகிறவர்.
அன்பிற்கும் சமாதானத்திற்கும் யார் வித்தியாசத்தை சொல்ல முடியும்?
அன்பு மனிதனிடத்திலும் கிடைக்கிறது... ஆனால் நிச்சயமாய் அந்த அன்பு பல எதிர்பார்ப்புகளுடன் தான் இருக்கும்! அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிடில் எந்த மாற்றுக்கருத்தும் இன்றி *அடுத்த க்ஷணமே அவர்களிடமிருந்தே வெறுப்பை எதிர்பார்க்கலாம்* !!
தேவ சமாதானமோ அன்புடன் கூடிய ஆளுகை. அது தேவனிடத்திலிருந்து மட்டும் கிடைக்கிறது !! கொலோ. 3:14-15
மனிதனிடம் அதை எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம் !!
தேவனை பற்றிக்கொள்ளுங்கள்... தேவனை மாத்திரமே பற்றிக்கொள்ளுங்கள்... !!!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக