*வேதாகமத்தில் எண்கள் - #1,000(ஆயிரம்)*
By: Eddy Joel Silsbee
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகள்.
எண்களின் பின்னணி, இன்று பார்க்கும் 1,000த்துடன் முடிக்கிறேன்.
10 – முழுமையை குறிக்கும் போது 10x10x10 = 1,000 முற்றிலும் முழுமை, எல்லாவற்றிலும் முழுமை, எதிலும் முழுமை, எப்படியும் முழுமை என்று முழுமையை பெருக்கி வேதாகமத்தில் கூறப்பட்டு இருப்பதை காண முடியும்.
நாம் புரிந்து கொள்ளும்படியுள்ள சஞ்கேத அர்த்தங்களேயன்றி - *எண்களை கொண்டு தேவன் கிரியை செய்வது இல்லை* என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
அவரில் அன்பு கூர்ந்து, அவர் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடந்தால் – 1,000 தலைமுறைக்கு இறக்கம் செய்கிறவர் (உபா. 5:10, 7:9)... முழுமையாய் இறங்குகிறவர் !!
சங். 50:10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் *ஆயிரமாயிரமாய்த்* திரிகிற மிருகங்களும் (எல்லா மிருகங்களும் !!) என்னுடையவைகள்.
சங். 84:10 *ஆயிரம் நாளைப்பார்க்கிலும்* உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது ... 1001வது யாருடையது என்ற கேள்வி அல்ல.... ஆயிரம் நாள் என்பது- அனைத்து நாளிலும் எல்லா நாளிலும்..
சங். 90:4 உமது பார்வைக்கு *ஆயிரம் வருஷம்* நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. & 2பேதுரு 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம். (அனைத்தும் தேவனுடையது !!)
வெளிப்படுத்தல் புஸ்தகத்தில் நாம் பார்க்கும் பதங்கள்:
1,000 வருடம் பிசாசு கட்டப்படுகிறான்,
1,000 வருடம் கிறிஸ்து ஆட்சி செய்கிறார்,
விசுவாசியாதவர்கள் 1,000 வருஷத்திற்கு மரித்திருக்கிறார்கள் – இவைகள் *காலங்களை அல்ல* முழுமையான ஆட்சி / நிறைவான தண்டனை என்று 100% முழுமையைக் குறிக்கிறது !!
*எ.கா*: *ஒனக்கு ஆ...யிரந்தடவ சொன்னாலும் அறிவில்ல* ஆயரந்தடவ கூப்டாச்சு – பதில் வரவே இல்லைனு மற்றவர்களை பார்த்து நாம் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?
1,000 முறை எண்ணி பிறகு சொன்ன வார்த்தையா? இல்லை...
அது முழுமையான முயற்சி ஏறெடுத்ததைக் குறிக்கிறது..
வேதாகமத்தில் வரும் 1,000 எண் – எங்கும் முழுமையை குறிக்கிறது !!
1,000 வருட அரசாட்சி என்பது கிறிஸ்து தன் இராஜ்யத்தின் முழுமையான ஆளுமையைக்குறிக்கிறது.
வீண் கற்பனைகளையும் ஆராய்ச்சிகளையும் விட்டு உண்மைக்கு திரும்ப வேண்டும் !!
ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றாலும் வேதாகமம் நமக்கு தெளிவுபடுத்தும் போது கீழ்படிய நாம் கடனாளிகள் !! (அப். 17:30)
நம் மீது தேவனின் அன்பு – முழுமையானது. (யோ. 3:16, 1:12)
ஸ்லீப்பர் செல்ஸ் போல மனித போதனைக்கு உடன்படாமல் - கிறிஸ்துவின் சீஷனாக இருத்தல் அவசியம்.!
நாம் வேத அறிவில் இன்னும் வளரும்படி தேவன் நம்மை பெலப்படுத்துவாராக !!
** 666ஐக் குறித்து அறிய விரும்புவோர் நம் கேள்வி பதில் எண் #268 மற்றும் #483ஐ பார்க்கவும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும்:
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/mxHBaZmPCo4
வேதாகம எண்கள் #1,000ஐக் குறித்த விரிவான தகவலுக்கு - வேதவகுப்பின் லிங்க்கில் காணவும்:
https://youtu.be/F1WGWY-dDvs?t=420
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக