#1203 - *எத்தனை சீஷர்களை ஆண்டவர் இயேசு அனுப்பினார்? 70ஆ அல்லது 72ஆ?* புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் 72 என்றும் பழைய மொழிபெயர்ப்புகளில் 70 என்றும் உள்ளதே. விளக்கவும்.
*பதில்* : பிரபலமான 46 ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் 28 மொழிபெயர்ப்புகள் 70 என்றும் 18 மொழிபெயர்ப்புகளில் 72 என்றும் உள்ளது.
குறிப்பாக 1611ம் ஆண்டில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமம் என்னிடம் உள்ளது. அதிலும் 70 என்றே போடப்பட்டுள்ளது.
தற்காலங்களில் பல முக்கிய வசனங்களை *விழுங்கியது மாத்திரமல்லாமல் காலத்திற்கேற்றார் போல மழுப்பி*; எளிமையான மொழியாக்கம் என்று பெயர்பெற்று அநேகரிடத்தில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் NIV என்று சொல்லப்படும் New International Verson ஆங்கில மொழிபெயர்ப்பில் 72 என்றுள்ளது!!
70 என்றே மூல வேதாகம எழுத்துக்களில் (கிரேக்க மொழியில்) உள்ளது.
மேலும், 70 என்ற எண்ணிற்கு பின்புலமாக கீழ்கண்ட விளக்கத்தையும் முன்வைக்கிறேன்:
மத்தேயு 10:5ல் பன்னிரென்டு சீஷர்களை அனுப்பும் போது புறஜாதியார் நாடுகளுக்கு போகாமல் இஸ்ரவேலர் வீட்டாரிடத்திற்கே போகவேண்டும் என்று கட்டளை கொடுக்கிறார்.
மேலும், இஸ்ரவேலரிலுள்ள ஜனங்களின் தலைவர்கள் 70 பேர் என்று எண். 11:16ல் காண்கிறோம். “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.
எண். 11:24-25லும் அவ்வாறே காணமுடிகிறது. ”அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். ”
பொதுவாக வேதாகமத்தில் மற்ற இடங்களில் 70 என்ற எண் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாத்திராகமம் 24:1; எரேமியா 29:10.
ஆகவே 70 என்ற எண்ணிக்கையே உண்மையான சீடர்களின் எண்ணிக்கையாக இருக்க மிக அதிக வாய்ப்புள்ளது.
இலகுவான மொழிபெயர்ப்பு என்று புதிய மொழியாக்கத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாங்கி வாசிப்பவர்கள் ஆழமான காரியத்தை தியானிக்கும் பொழுது பல மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆய்வது உசிதம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 29 அக்டோபர், 2022
#1203 - எத்தனை சீஷர்களை ஆண்டவர் இயேசு அனுப்பினார்? 70ஆ அல்லது 72ஆ? புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் 72 என்றும் பழைய மொழிபெயர்ப்புகளில் 70 என்றும் உள்ளதே. விளக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக