#1155 - *கொலை செய்தவர் சபைக்கு வரலாமா? அல்லது அவரை மன்னித்து சபையில் ஏற்றுக் கொள்ளலாமா? இதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் நலமாக இருக்கும்*.
*பதில்* : அரசாங்க சட்டப்படி தண்டனை பெற்று விடுதலையானவரையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இல்லாதபட்சத்தில் சட்டத்திற்கு அவர் முதலாவது கீழ்படியவேண்டும். (ரோ. 13:1-2, 5)
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் *சகல பாவத்தையும்* நீக்கி நம்மை சுத்திகரிக்க வல்லது. 1யோ. 1:7, மாற்கு 3:28-29.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் ஒருவரான ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் (அப்போஸ்தலனாகிய) பவுலும் ஒருவரல்லவா? அப். 8:1
அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டது மாத்திரமல்ல, அவரைக் கொண்டும் பரிசுத்த ஆவியானவர் சுமார் 13 நிரூபங்களை நமக்கு வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளாரே!
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் அதே பவுல் தனது வாழ்வின் முடிவில் நல்ல போராட்டத்தை போராடினேன் ஜீவகிரீடம் எனக்கு வைக்கப்பட்டுள்ளது என்கிறார். 2தீமோ. 4:7-8
ஒருவரும் கெட்டுப்போக தேவன் சித்தம் கொள்வதில்லை. மத். 18:11.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; 1தீமோ. 1:15
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோ. 3:17
ஆனால், பிரதானமாக, அரசாங்கத்தில் தண்டனை பெற்று விடுதலையாகி இருந்தாலும் அவரது சுய ஆத்துமாவில் கிறிஸ்துவை விசுவாசித்து தனது பாவங்களை உணர்ந்து மனந்திரும்பி இரட்சகரின் மீதுள்ள தனது விசுவாசத்தை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிந்து ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டாலன்றி பரலோக நீதிமன்றத்தில் அவரது பாவம் மன்னிக்கப்படுவதில்லை! மாற்கு 16:16; அப். 22:16, 2:38
துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசே. 18:21-23
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். மத். 6:14-15
ஆகவே, வேதத்தின்படி அவரது மனந்திரும்புதல் இருக்கும் பட்சத்தில் கிறிஸ்துவும் பரலோகமும் அவரை ஏற்றுக்கொள்கிறது என்று வேதம் நமக்கு உத்திரவாதம் அளிப்பதால் அப்படியே நாமும் அவரை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக