ஞாயிறு, 17 ஜூலை, 2022

#1148 - விசுவாசி ஒருவர், தனது குடிகார கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவனோடு தொடர்பை வைத்து வீட்டை விட்டு வெளியேறி போய் வசித்துக் கொண்டிருக்கிறாள்

#1148 - *விசுவாசி ஒருவர், தனது குடிகார கணவரை விட்டுவிட்டு வேறு ஒருவனோடு தொடர்பை வைத்து வீட்டை விட்டு வெளியேறி போய் வசித்துக் கொண்டிருக்கிறாள்*. இதை ஊரே அறிந்தது. இதுபோல ஏற்கனவே ஒரு  இரண்டு முறை நடந்து விட்டது  மூன்று பிள்ளைகளையும் தன் பக்கமாய் வைத்துக் கொண்டுள்ளதால் பிள்ளைகளுக்கு தாயைப் பற்றி தவறான புரிதல் இல்லை. இப்பொழுது அந்த குடிகார கணவர் நான் இனிமேல் குடிக்க மாட்டேன் மனைவியை மீட்டுக் கொடுங்கள் என்று புலம்புகிறார். நான் குடித்ததினால் என் மனைவி கெட்டு போய்விட்டாள் என்று வருந்துகிறார். இவர்களை இணைக்க முடியுமா? கணவர் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் அந்த சகோதரியிடம் எப்படி சொல்லி அழைப்பது?

*பதில்* :
1- (உங்களது வரிகள்) *விசுவாசி* குடிகார கணவரை  விட்டுவிட்டு வேறு ஒருவனோடு தொடர்பை வைத்து  வீட்டை விட்டு வெளியேறி போய் வசித்துக் கொண்டிருக்கிறாள். ஊரே இதை அறியும்.

*விளக்கம்* : இவரை விசுவாசி என்று அழைப்பது தவறு... இவர் வேசித்தனம் செய்கிறவர். தனது தவறை உணர்ந்து தனது கணவனிடமும் தேவனிடமும் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பவேண்டும். யாக். 5:16

கணவன் குடிகாரனாயிருந்தாலும், அவிசுவாசியாயிருந்தாலும் - மனைவியானவள் பொறுமையாயிருந்து கணவரது மனந்திரும்புதலுக்காக தேவனிடம் மன்றாட வேண்டும்.

மனைவியானவள், தனது புருஷனுக்கு புத்திமதி சொல்லி வேதாகமத்தை போதிக்க வேண்டும் என்று *வேதம் சொல்லாமல்* அவள் தனது கற்புள்ள நடக்கையை தனது கணவனுக்கு முன் காண்பிக்கவேண்டியது அவசியம். வசனத்தை கவனிக்கவும்.

1பேதுரு 3:1-2 ... மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது *அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே* ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

2- (உங்களது வரிகள்) இப்பொழுது அந்த குடிகார கணவர் நான் இனிமேல் குடிக்க மாட்டேன் மனைவியை மீட்டுக் கொடுங்கள் என்று புலம்புகிறார். நான் குடித்ததினால் என் மனைவி கெட்டு போய்விட்டாள் என்று வருந்துகிறார்  இவர்களை இணைக்க முடியுமா ஆனால் கணவர் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் அந்த சகோதரியை எப்படி சொல்லி அழைப்பது?

*விளக்கம்* :இனிமேல் குடிக்க மாட்டேன் என்ற உங்களது வரிகளை காணும் போது - இன்றும் குடித்துக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. தன் மனைவியின் இந்த விபசார செயலுக்கு இவரும் காரணம். சதா குடித்துவிட்டு தனது சுகத்தையே தேடிக்கொண்டு தனது மனைவிக்கு தனது மாம்சத்தின்படியாக செய்ய வேண்டிய தனது கடமையை செய்யாமல் விட்டதன் விளைவு, இவரது மனைவி வேறொரு புருஷனை தேடினாள் (1கொரி. 7:2).

எக்காரணத்தைக் கொண்டும் கணவன் மனைவி இருவரும் மாம்சத்தில் (தாம்பத்தியத்தில்) பிரிந்திருக்கக்கூடாதென்று வேதாகமம் தெளிவாய் சொல்கிறது. ஏதாவதொரு காரணம் இருக்குமாயின் அதுவும் *சிலகாலம் மாத்திரமே* பிரியலாம் என்றும்... அதுவும் இருவரும் இப்படியாய் சம்மதித்தாலன்றி என்றும் தெளிவாய் சொல்கிறது (1கொரி. 7:5). கீழுள்ள வசனங்களை கவனிக்கவும்:

ஆகிலும் *வேசித்தனம் இராதபடிக்கு* அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். *புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்*. மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று *சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்*; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் *சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு*, மறுபடியும் கூடி வாழுங்கள். 1கொரி. 7:2-5

முதலாவது இவர் தனது குடிப்பழக்கத்தை விட்டு தனது நடத்தையை சரிசெய்ய வேண்டும். தனது குடும்பத்தின் சீரழிவை சரிசெய்யவேண்டியது இவரது பொறுப்பு. இவரது மனந்திரும்பிய வாழ்க்கையை கண்டு உத்தமமாக இருப்பதை வேசித்தனத்தில் இருக்கும் இவரது மனைவி கண்டு, பிள்ளைகளோடு தனது மனந்திரும்பிய கணவனிடம் வந்து சேர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனிடம் மன்னிப்பிற்காக மன்றாடி வேண்டி கூடி வாழவேண்டும். அதற்காக அனைவரும் ஜெபிக்கவேண்டும்.

இருவரது பிரிவை மற்றவர்கள் அல்ல... தங்களுள் தாங்களே இவர்கள் இருவரும் சரிசெய்ய வேண்டிய கடமையுள்ளது.

(தாம்பத்தியத்தில்) கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன் என்ற பெயரிலேயே இக்காலங்களில் பலர் தனது மனைவியை பிரிந்திருப்பதும், கணவனை பிரிந்திருப்பதும் வேசித்தனத்திற்கு வழிவகுக்கும் என்பதை உணரவேண்டும். பிசாசின் வெற்றி இது.

பரலோகத்தை விட்டு நரகத்திற்குள் தள்ளப்பட்டு நித்திய வாழ்வை இழந்துவிடாமல்;
கணவன் - மனைவி இருவரும் தங்களது வேறுபாடுகளை களைந்து, தவறுகளை சரிசெய்து, பிரிவினைகளை களையெடுத்து, ஏற்றத்தாழ்வுகளை விட்டு *கட்டாயம் கூடி வாழவேண்டும்*. இருவரையும் இணைத்தது தேவன் !!

இந்த பதிவு அநேகருக்கு பாடமாயிருக்கட்டும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 8144 776229 (இந்தியா)
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக