வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

#1149 - பூமியின் கீழானோர் யாரை குறிக்கிறது?

#1149 - *பூமியின் கீழானோர் யாரை குறிக்கிறது?* எப்படி பட்டவர்களை குறிக்கிறது, எந்த இடத்தை குறிக்கிறது ஐயா... விளக்கவும்... இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் *பூமியின் கீழானோரு*டைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் என்று பிலிப்பியர் 2:10ல் வருகிறதே? நன்றி...

*பதில்* : பூமிக்கு அடியில் இருப்பவை. முழு பிரபஞ்சமும் அவர் தேவன் என்று ஒப்புக்கொள்ளும். எபி. 1:6; வெளி. 4:10; 5:13-14; ரோ. 14:10-11; ரோ. 10:12; சங். 45:6, 103:19; ஏசா. 9:6-7; எரே. 23:5-6; மீகா 5:2; யோ. 1:1-3; 10:30; அப். 20:28; பிலி. 2:6-11; கொலோ. 1:16; 1தீமோ. 3:16; எபி. 1:8-13; 1யோவான் 5:20

இது, சந்தேகத்திற்கு இடமின்றி, வாழ்க்கையை விட்டுப் பிரிந்தவர்களைத் குறிக்கிறது.  மேலும் ஒருவேளை விழுந்த தூதர்களையும் உள்ளடக்கியிருக்கலாம்.

இதன் பொருள் என்னவென்றால், அனைவரும் கிறிஸ்துவை தேவனாக ஒப்புக்கொள்வார்கள்; அவருடைய இறையாண்மைக்கு எப்படி எல்லாம்; அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்;  வீழ்ந்தவனுக்கும் இழந்தவனுக்கும் உட்பட அனைவருக்குமான தேவன் அவர்.

ஏனென்றால், அவருடைய வாயில் இருந்து வரும் வார்த்தைக்கு கீழ்படிவதன் மூலம் அவருக்கு மகிமையை செலுத்த அவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். இதனால் முழு பிரபஞ்சமும் தேவகுமாரனின் உன்னதமான மகிமையை அங்கீகரிக்கும்.

ஆனால், விழுந்துபோனவர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

பாதாளத்தில் தள்ளப்பட்டவர்களும், விழுந்து போனவர்களும் கிறிஸ்துவின் வல்லமையை உணர்ந்து பணிகிறார்கள். யாக். 2:19; மத். 8:29; மாற்கு 1:24; 5:7; லூக்கா 4:34; அப். 16:17; 19:15; 24:25; யூதா 1:6; வெளி. 20:2-3; 20:10.

குறிப்பு வசனங்களை வாசிக்க தவறவேண்டாம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 8144 77 6229 (இந்தியா)
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக