வியாழன், 9 ஜூன், 2022

*எளிமை எங்கே போனது*

 


*எளிமை எங்கே போனது*

by : Eddy Joel Silsbee

 

வல்லவரான நம் ஆண்டவர் நம்மை சகல நன்மையினாலும் நிரப்புவாராக.

 

சமுதாயம் மதிக்கும்படி ஏற்ற நடை உடை பாவனைகளை மாற்றிக்கொள்கிறோம்.

 

*ஓட்ட தெரியவில்லையென்றாலும், ஒரு சின்ன கார் தன் வீட்டின் முன்பு நின்றால் கவுரவம்* என்று லோன் போட்டாவது  வாங்கி நிறுத்தும் ஜனங்களும் இருக்கிறார்கள்.

 

ஆனால் –

ஒட்டகத்தின் தோலை உரித்து உடுப்பாக உடுத்திக்கொண்டு, காட்டுவாசியைப் போல, வெட்டுக்கிளியும் காட்டு தேனும் சாப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையில் மிக எளிமையாக வாழ்ந்த *யோவான் ஸ்நானகனுடைய குரல் அந்த நாட்டு ராஜாவின் அரண்மனையில் ஒலித்தது*. (மாற்கு 1:6, மத் 14:3-5)

 

இந்த எளிய மனுஷனுக்கு, ராஜாவே கீழ்படியும் அளவிற்கு அவர் நடத்தையில் பரிசுத்தம் இருந்தது.

 

வெளித்தோற்றத்தை அலங்கரிக்கும் முயற்சியை விட எண்ணங்களும் செயல்பாடுகளும், தூய்மையாயும் பரிசுத்தமாயும் இருக்கும் போது,  உயர்ந்த மனிதர்கள் முன்பு நம்மை தேவன் நிறுத்துவார். நீதி. 22:29

 

*நம்மை நாமே உயர்த்திக்கொள்வது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது – உத்தமமாய் இருந்தால் தேவனே நம்மை உயர்த்துவார்*. அதுவே மேன்மை. சங் 113:7

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +971 50 211 7410 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

https://youtu.be/xdxG1j1j070

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக