திங்கள், 9 மே, 2022

ஜெபத்தில் விளம்பரம் வேண்டாமே

*ஜெபத்தில் விளம்பரம் வேண்டாமே*

by : Eddy Joel Silsbee

 

நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

ஒரே ஒரு விண்ணப்பத்தை ஜெபிக்க கொடுத்தாலும், அதை எவ்வளவு ஜோடிக்க முடியுமோ அவ்வளவு ஜோடித்து விலாவாரியாக வசனங்களை அடுக்கடுக்காக சொற்றொடராக சொல்லி வியர்த்து விறுவிறுத்து ஆமென் ஆமென் ஆமென் என்று ஜெபித்து முடிப்பவர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

 

அவர்கள் அவ்வாறு ஜெபித்து முடித்ததும்;

சுமாராக அமைதியாக பொறுமையாக ஜெபிப்பவர்களுக்கு ஐயோ,  நமக்கு இப்படி ஜெபிக்க தெரியவில்லையே என்ற பயமே வந்து விடுகிறது.

 

போதகனை மிஞ்சிவிடவேண்டும் என்பது தானே சீஷனின் முயற்சி !! மத். 10:24

 

ஆனால், ஜெபத்தை குறித்த வேத குறிப்புகளோ முற்றிலும் மாறுபட்டது !!

 

ஜெபம் சுருக்கமாக இருந்தால் மிக மிக மிக போதுமானதே !! பிர. 5:2

 

திரும்பத் திரும்ப சொன்ன வார்த்தைகளையே சொல்வதும், உச்சரிப்பதும் வீண் (மத். 6:7). அப்படி ஜெபிப்பவர்கள் அறிவில்லாதவர்கள் என்கிறார் இயேசு !!

 

ஒரு மணி நேர ஜெபம்,

24 மணி நேர ஜெபம் என்ற பெயரில் குடும்பப் பெண்களை வசப்படுத்தி, குடும்பங்களையும் கவிழ்த்துப் போட்டு, இருந்த சமாதானத்தையும் கணவன் மனைவிக்கிடையே குலைத்துக் கொண்டிருக்கிற இந்த கால நவீன போதகர்களை குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். மாற்கு 12:40

 

அவர்களுக்கும் அதிக ஆக்கினை உண்டு – மத். 23:14, லூக்கா 20:47

 

மேடை போட்டோ, விளம்பரப்படுத்தியோ, ஜெபிக்கப் போகிறேன் என்று வாட்சப் குழுவில் தெரிவித்தோ,  பாஸ்டரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டோ அல்ல, *ஜெபம் பண்ணும் போது உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்*.  மத். 6:6

 

சிறைபிடித்துக்கொண்டு வரப்பட்ட சிறு பிள்ளை கூட புரிந்து கொள்ளும்படி *ஜெபம் எளிமையாக இருந்திருக்கிறது*.. 2 இரா. 5:2-3

 

தாழ்த்தி, உற்சாகமாய், ஊக்கத்தோடு நம்பிக்கையோடு சுருக்கமாக உத்தமமாய் தேவனிடத்தில் ஜெபிப்போம்.

 

தேவன் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பவர் (சங். 121:4).

 

விக்கிரக ஆராதனைக்காரர் செய்வது போல கரங்களை தட்டிக்கொண்டே ஜெபிப்பது வேத முறையல்ல (1 இரா. 18:27).

 

இவ்வகை கூட்டத்தாரின் நிமித்தம் உண்மைக் கிறிஸ்தவரின் நற்பெயரே சமுதாயத்தில் கெட்டுப்போனது என்று “நான் சொல்லி எவரும் அறிய வேண்டியதில்லை...

 

நம் தேவன் ஜீவனுள்ளவர்.

நம் தாழ்மையான அமைதலான ஜெபத்தையும் அவர் கேட்டு நிச்சயமாய் பதில் தருகிறவர்.

 

மிகக் கொடுமையான கொள்ளைநோயின் காலங்களில் நாம் வாழ்கிறோம்.

 

விளம்பரத்திற்காக அல்ல, உண்மையாய் கண்ணீர்விட்டு முழுமனதுடன் அனைவருக்காகவும் நாம் ஜெபிப்போம்.

 

நம் பிதாவிடம் மன்றாடுவோம். நிச்சயம் பதிலளிப்பார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/bnNsHTgAAXg

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக