வியாழன், 26 மார்ச், 2020

#813 - யாக்கோபு ஏமாற்றுக்காரனாய், ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டவன். கர்த்தர் அவனை ஏன் தெரிந்து கொண்டார்?

#813 -  *ஏமாற்றுக்காரனான யாக்கோபுவை கர்த்தர் அவனை ஏன் தெரிந்து கொண்டார்? தனது சகோதரன் ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தையும், ஆசீர்வாதத்தையும் ஏமாற்றி பெற்றுக்கொண்டவனல்லவா? *

*பதில்*
சேஷ்டபுத்திரபாகம் என்பதை நாம் முதலாவது புரிந்து கொண்டால் – இந்த செயல்பாட்டில் யாக்கோபுக்கு கிடைத்தது எப்படி என்று அறிந்து கொள்ள முடியும்.

சேஷ்டபுத்திரன் என்றால் – குடும்பத்தின் தலைபிள்ளை / அல்லது மூத்தப்பிள்ளை.

தகப்பனுக்கு அடுத்த ஸ்தானத்தில் இந்த மூத்தபிள்ளை தான் பொருப்பு வகிக்கிறார் எந்த காரியத்திலேயும்.

இந்துக்கள் முறையில் – தலைச்சன் பிள்ளைக்கு எவ்வளவு முக்கியத்தவமும் மதிப்பும் உள்ளது என்பது இந்தியாவில் பிறந்த நமக்கு அறியாதது அல்ல.

வேதாகமத்தில் (முற்பிதாக்களின் காலம் & நியாயபிரமாண காலத்தில்) – முதல் தலைச்சன் பிள்ளைக்கு என்ன முன்னுறிமை என்பதை கீழே பட்டியலிடுகிறேன்:

Exo 13:2 இஸ்ரவேல் புத்திரருக்குள் *மனிதரிலும்* மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற *முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்*.

Num 3:13 *முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை*; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் *மனிதர்முதல்* மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் *எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்*.

இவருக்கு பிறந்த அனைவர் மீதும் அதிகாரம் – ஆதி 7:7

ஆஸ்திகளில் இரண்டு மடங்கு – உபா 21:17
(தகப்பனுக்கு பிறகு தகப்பன் ஸ்தானத்தில் உள்ள பொறுப்பு மற்றும் பிள்ளையாக ஒரு பங்கும் சேர்த்து – 2மடங்கு)

ஆளுகையும் / ஆட்சியும் தகப்பனுக்கு பின் சேஷ்டபுத்திரனை சாரும் – 2நாளா 21:3

இஸ்ரவேல் (ஜனம்) – என்னுடைய சேஷ்டபுத்திரன் என்றார் தேவன் !! – யாத் 4:22

சுருங்க சொன்னால் - சேஷ்டபுத்திர பாகம் என்பது இரண்டு ஆதாயம்:

1- இரண்டு மடங்கு சம்பத்து – உபா 21:17
2- தகப்பனின் ஆசீர்வாதம் / அங்கீகாரம் / குடும்பத்தின் மீதான அதிகாரம் – ஆதி 27:36

** இவையெல்லாவற்றைக்காட்டிலும் தேவன் குடும்பத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தார். ஆதி 23:11

தன் தாத்தா ஆபிரகாமுடன் தொடர்பில் இருந்தார் – ஆதி 17:5

தன் அப்பா ஈசாக்குடன் தொடர்பில் இருந்தார் – ஆதி 25:11

தன்னுடன் தேவன் எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று ஆர்வத்தை நாம் யாக்கோபிடம் காணமுடிந்தது – ஆதி 32:26

யாக்கோபு – தேவனுடைய பிரசன்னத்தை அதிகமாய் விரும்பி தேடி ஆசீர்வாதத்தை ஏசாவினிடமிருந்து பிடுங்கி கொண்டார்.

சேஷ்டபுத்திரபாகத்தின் இரகசியம் அல்லது மேன்மை ஏசாவிற்கு ஒரு ஆகாரத்திற்கு இனையாக தான் கண்டார் – ஆதி 25:32, எபி 12:16

ஆனால் யாக்கோபு அதனை ஆர்வத்துடன் பற்றிக்கொண்டதால் / விரும்பியதால் / தேடியதால் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார் – ஆமோஸ் 5:14, ரோ 2:7

கர்த்தரை தேடுகிறவர்களுக்கு அவர் சமீபித்திருக்கிறாரே – சங் 9:10, நீதி 8:17, எபி 11:6

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக