செவ்வாய், 3 மே, 2022

படைத்தவரே மேலானவர்

*படைத்தவரே மேலானவர்*

by : Eddy Joel Silsbee

 

சமாதானத்தின் தேவன் தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

 

நன்மை வேண்டும்,

சாதகம் நம் பக்கம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்,

ஊர் தலைவர்களையும்,

அதிகாரிகளையும்,

ஆள்பவர்களையும்,

செல்வாக்கு உள்ளவர்களையும் தன் வசம் சாதகமாய் வைத்துக் கொள்வதற்கு அநேகர் முயற்சி செய்வதுண்டு.

 

ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; *ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்*. நீதி. 29:26

 

பணக்காரர்களை தன் வசமாய் வைத்துக்கொண்டால் எதையும் சாதிக்க முயல்வர் பலர். நீதி. 19:6

 

ஆனால், சர்வத்தையும் தன் கரங்களில் வைத்து ஆளுகிறவர் நமக்காய் காத்துக்கொண்டிருப்பதை எவரும் உணர்வதில்லை. எபே. 1:3, ஆதி. 17:1

 

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். மீகா 6:8

 

தனது சுவாசத்தை தனது நாசியில் வைத்து தனது உயிரை கூட காத்துக் கொள்ளத் திராணியில்லாத மனிதனின் பெலனை நம்பாமல் அந்த அதிகாரத்தை தன்னில் வைத்திருக்கும் தேவனிடத்தில் முதலாவது ஒப்புகொடுப்போம்.

 

தேவசித்தப்படி எந்தக் கடினமான காரியமானாலும் சகலமும் சீராகும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/egnqkchXC4g

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக