*விறைத்த கழுத்து*
by : Eddy Joel Silsbee
புதிய உடன்படிக்கையை உண்டுபண்ணின இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
*எழுத்து கொல்லுகிறது. ஆவி உயிர்பிக்கிறது* என்று பவுல் மூலமாக ஆவியானவர் 2கொரி. 3:6ல் நமக்கு எழுதி வைத்தார்.
மோசேயின் நியாயபிரமாணத்தை சிலுவையில் முடித்து வைத்தார் இயேசு கிறிஸ்து. ரோ.10:4
கிருபையும் சத்தியமும் *இயேசு கிறிஸ்துவின் மூலமே உண்டாயின*. யோ. 1:17
கிறிஸ்துவினிடத்தில் கொண்டு சேர்க்கிறது நியாயபிரமாணம். (கலா. 3:24). அதாவது, நியாயபிரமாணம் என்பது ஆரம்பம். சிலுவைக்குப் பின்னர் இப்போது நிறைவான கிறிஸ்துவின் பிரமாணமே நடைமுறையில் உள்ளது. கொலோ. 2:10, 17
நமக்கு பகையாக இருந்ததும், புறஜாதியாராகிய நம்மை பிரிவினைப்படுத்தியிருந்த நியாயபிரமாணத்தை தன் மாம்சத்தினாலே ஒழித்தார். எபே. 2:14-16
புதிய ஏற்பாட்டின் முதல் 4 புத்தகங்களில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தொடர்ந்து வரும் அனைத்து நிருபங்களுமே *புதிய உடன்படிக்கையை பின்பற்ற நம்மை வலியுறுத்துகிறது*.
*மோசேயின் நியாயபிரமானம் கிறிஸ்தவர்களுக்கு இல்லை* என்று எவ்வளவு சொல்லியிருந்தும் மக்கள் வணங்கா / விறைத்துப் போன கழுத்து உள்ளவர்களாய் தான் இருக்கிறார்கள்.
சொந்த மொழியில் வேதாகமம் இருந்தாலும் உணர்வு இல்லை.
மோசே நியாயபிரமாணத்தை கொண்டு வந்த போது 3000 பேர் மரித்தார்கள் - யாத். 32:28
கிறிஸ்து புதிய உடன்படிக்கை சபையை ஸ்தாபித்தபோது 3000 பேர் ஞானஸ்நானம் பெற்று நித்தியத்திற்கென்று உயிர்த்தார்கள். - அப். 2:41
கொள்ளை நோயின் காரணமாக வாரத்தின் முதல் நாளில் கூடுவதை அரசாங்கம் தடைசெய்த காலத்தில், பழைய ஏற்பாட்டுக்கு உயிர் கொடுக்கத் துவங்கிய கிறிஸ்தவ மத சபைகள், நாதாபையும் அபியுவையும் நினைவுப்படுத்துகிறார்கள். எண். 3:4
தேவன் பட்சபாதமற்றவர்.
சூழ்நிலையை மனதில் கொண்டு பழைய கட்டளையை நினைவுக்கூர்ந்து செயல்படுத்திய மோசேயைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. எண். 20:11, 20:8, யாத். 17:6
நீங்கள் எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்? உணர்வடைவோம். கர்த்தருடைய நாளை அசட்டை செய்யாதிருப்போம்.
கர்த்தருடைய நாளில் குடும்பமாக கூடுவதற்கும், அவருடைய பந்தியை வீட்டிலிருந்து இரட்சிக்கப்பட்ட குடும்பத் தலைவன் பரிமாறுவதற்கும், அவசியப்பட்டால் சபை ஊழியர் அவர்களுக்கு தேவ செய்தியை காணொளி மூலம் கொண்டு சேர்ப்பதற்கும் எந்த தடையும் இல்லையே !!
காணிக்கையல்ல, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிதலே முக்கியம். உணர்வுள்ள சபையார், அதையும் சீராய் செய்ய மாட்டார்களோ ??
நியாயபிரமாணத்திற்கல்ல, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு கீழ்படியவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/N9xNi3C-dXI
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக