புதன், 11 மே, 2022

மாறுபடும் வாயும் இருதயமும்

 

*மாறுபடும் வாயும் இருதயமும்*

by : Eddy Joel Silsbee

 

சபைக்கு தலையாயிருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சகோதரர் ஒருமித்து வாசமாய் இருக்கும் இடம் எவ்வளவு இன்பமானது என்று சங்கீதம் எழுதிய தாவீது உணர்ந்திருக்கிறார். (சங். 133:1)

 

இந்த வாக்கியத்தை தங்கள் அனுபவ பூர்வமாக:

எத்தனை பிராந்தியங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

எத்தனை வேறுபாடுகள்?

எத்தனை வித்தியாசமான போதனைகள்?

எத்தனை வித்தியாசமான கோட்பாடுகள்?

 

வாயில் புன்னகை; இருதயத்திலோ புண் நகை (புண்கள்)

வாயில் வரவேற்பு; இருதயத்திலோ வரும் வெறுப்பு

 

வேஷங்களை களைந்து;

உள்ளத்தில் உள்ளவைகளை *“அப்படியே” சொல்லும் கிறிஸ்தவனை இலகுவாக காண முடிவதில்லை*.

 

உறுப்பினர்கள் பெருக பெருக - கருத்துக்களும் கோட்பாடுகளும் அவர்களுக்குள்ளேயே பலபல வந்துவிடுகிறது.

 

*சபையாக இல்லாமல்;*

நிறுவனங்களாகவும், கம்பெனிகளாகவும் கிறிஸ்தவ க்ளப்புகளாகவும் ஆடல் பாடல் அரங்கங்களாகவும், பொழுது போக்கு மையங்களாகவும் ஆராதனை திருவிழாக்களும் உபவாச மேடைகளாகவும் அற்புத மேளாக்களாகவும் நடந்துகொண்டிருக்கிறது.

 

கிறிஸ்துவே எங்கள் சபைக்கு தலைவர் என்று அவரவர் சொல்லிக்கொண்டாலும்,

கீழ்படிவதோ அவரவர் சபை நிறுவனத் தலைவர்கள்(!) சொல்படி ஆராதனைகளும் முறைகளும் வளைக்கப்பட்டிருக்கிறது..

 

வேதத்தை ஆராயாமல்;

தானும் உணராமல்;

மற்றவர்களையும் வேதத்திற்கு கீழ்படிய விடாமல்;

மேலோட்டமாக சமாதானம் ஆசீர்வாதம்” என்று சொல்பவர்களின்  பேச்சைக்கேட்டு சொந்த ஆத்துமாவை இழந்து விடக்கூடாது. (எரே. 6:14)

 

படிக்க சங்கடமாக ருந்தாலும் கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் வேதனையை அறியவேண்டும்.

 

சடங்காச்சாரங்களையும் சொந்த கற்பனைகளையும் வேதத்தில் சொல்லப்படாத வீணான பண்டிகைகளையும் களைந்து கர்த்தருடைய கட்டளைக்கு திரும்பும்படியாக இந்த நாட்களில் நாம் எச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்.

 

சத்தியத்தை அறிவோம், கீழ்படிவோம், *கிறிஸ்துவின் கட்டளைக்கு அப்படியே நடப்போம்.*

 

தேவ ஆசீர்வாதம் நம்மை நிச்சயம் தொடரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/icFBIImDivk

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக