செவ்வாய், 10 மே, 2022

அழைக்கப்பட்ட நிலைமையில் நிலைத்திருந்தால் சந்தோஷம்

*அழைக்கப்பட்ட நிலைமையில் நிலைத்திருந்தால் சந்தோஷம்*

by : Eddy Joel Silsbee

 

அனுதினமும் நம்மை ஆசீர்வதிக்கும் தேவனுடைய நாமத்திற்கு எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.

 

ஏதோ வாழ்ந்தோம், எதையோ செய்தோம், எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது என்று நாம் இல்லாதபடிக்கு...

தேவன் நம்மை படைத்த நோக்கத்தை முன்னிட்டு உற்சாகத்தோடு ஓடுவோம்.

 

தேவன் நமக்கு கொடுத்த வாழ்கையை நேசியுங்கள். (எபே. 2:4-5)

 

கசப்பான வேர் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எபி. 12:15

 

மேன்மையும் கவுரவமும் இருதயத்தில் ஒட்டிக்கொள்ளத் துவங்கியதை உணர்ந்தால்; அழிவு வாசல் வரை வந்துவிட்டது என்பதை அறிந்து “சடுதியில்” அந்த குணத்தை உதறிபோட்டு விட வேண்டும் – நீதி. 18:12

 

வியாதியும் வேதனையும் நம்மை சூழும் க்ஷனத்தில்;

சகல கவுரவத்தையும் வசதியையும் நாமே உதறி போட வேண்டியதாகும் – யோபு 2:8

 

நம்மிடத்தில் தேவன் எதிர்பார்த்து கொடுத்த மற்றும்னுமதித்த வாழ்க்கையை *வாழ* தவறவேண்டாம். எபே. 2:5-6

 

அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையில் - எப்படிப்பட்ட கணவனும்/மனைவியும் வாழ்வும் வாழ்க்கையும் அமைந்திருந்தாலும் அதிலே நிலைத்திருக்கவேண்டும்.

அதை மாற்ற முயற்சிக்கக்கூடாது – 1கொரி. 7:1-24

 

தேவன் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ அதை ஜீவனுள்ள வரை வெளிப்படுத்துவோம். எபே. 2:10

 

சந்தோஷமும் சமாதானமும் நாம் நடந்து கொள்வதை பொருத்தது !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/_V-tfmdbb1Q

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக