புதன், 4 மே, 2022

பிரயோஜனமற்ற பிரயாசம்

 

*பிரயோஜனமற்ற பிரயாசம்*

by : Eddy Joel Silsbee

 

தேவ தூதர்களால் எப்போதும் போற்றப்படுகிற பிதாவாகிய தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.

 

1-தேவன் உன்னதமானவர் என்று அவள் *வெளியரங்கமாக* பறைசாற்றினாள்.

 

2-அவர்கள் தேவனுடைய ஊழியர் என்று அவள் *வெளியரங்கமாக* சொன்னாள்.

 

3-இரட்சிப்பின் வழியை அவர்கள் சொல்கிறார்கள் என்றும்  அவள் *வெளியரங்கமாக* பறைசாற்றினாள்.

 

இப்படி அவர்கள் பிறகே எப்போதும் *பல நாட்களாக* சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறாள் !!  அப். 16:17-18

 

ஆஹா, இவள் நமது ஊழியத்திலும் புதிய மக்கள் மத்தியிலும் நல்ல விளம்பரமாகவும் பிரயோஜனமானவளாகவும் இருப்பாள் என்றும், நாம் சொல்லாமலேயே *தெருவெல்லாம் நம்மைப் புகழ்கிறாள்* என்று சந்தோஷப்பட்டு ஊழியத்திற்கு உதவியாய் தங்கள் கூடவே பவுல் அவளை வைத்துக் கொள்ளாமல், *பிசாசு அவள் இருதயத்திற்குள்ளே* இருப்பதை கண்டு பிடித்து விரட்டினார் !!

 

ஆம்... நம்மை துதிபாடி வரும் நான்கு ஐந்து பேரை கூடவே வைத்துக்கொண்டு எங்கு போனாலும் அவர்களை முதலில் பேசவிட்டு ஐயா பெரியவர், வல்லவர், அறிவாளி என்று ஆஹா ஓகோ என்று சொல்வதற்கும், தாங்கள் செய்வது எல்லாம் சரி என்று *சுய புகழ்ச்சியை தேடாமல் சத்தியத்தில் நிலைநிற்போம்*

 

மறுபக்கத்தில் அது போன்று;

*சத்தியம் தவறாக போதிக்கிறார் என்றறிந்தும்*;

லாபத்திற்காகவும் ஐக்கியத்திற்காகவும் முகத்திற்காகவும் வளர்த்திவிட்ட கடமைக்காகவும் கூடவே ஒட்டிக்கொண்டு ஊருக்கு வேஷம் போடுவது கிறிஸ்துவின் விசுவாசத்திற்கு செய்யும் துரோகம்.

 

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியில்லை என்பதை அறிவது அவசியம். எபி. 10:26

 

இரண்டு பக்கத்திலும் மனந்திரும்புதல் கட்டாயம் அவசியம் !!

 

நாம் சம்பாதித்த பெயரையும் புகழையும் அடிப்படையாக வைத்து மரணத்தில் பிரியும் ஆத்துமாவை தேவத்தூதன் பரதீசுக்கு அல்லது பாதாளத்திற்கு கொண்டுபோவதில்லை !!

 

சத்தியத்தில் நிலைத்திருப்பதே அவசியம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/dV6kdU4jwEI

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக