ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

காட்டுக் கொடி பிரியப்படும் அக்கினி

*காட்டுக் கொடி பிரியப்படும் அக்கினி*

by : Eddy Joel Silsbee

 

மெய்யான திராட்சை செடியாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எந்தச் செடியையும் சுற்றி வளைத்து வளருவது காட்டுக் கொடி.

 

செடியை விட இவ்வகை கொடி மிக வேகமாக வளர்ந்து,

செடியே தெரியாத அளவிற்கு கொடிகள் மூடி வளர்ந்து செழிப்பாக இருக்கும்.

 

நாளடைவில், செடிக்கு போக வேண்டிய தண்ணீரையும், சத்துக்களையும் இந்தக்கொடி உறிஞ்சிக் குடித்து செடியின் தண்டையும் கிளையையும் நெறித்துப் போட்டு செடியின் வளர்ச்சியை தடுத்துவிடுவதால் தோட்ட உரிமையாளர் அந்தக் காட்டு கொடியை வேரோடு பிடிங்கிப்போடுவார்.

 

அதுபோலவே, கி.பி 33ம் ஆண்டில் கிறிஸ்துவால் துவங்கப்பட்ட சபையை விட மனிதர்கள் பிற்காலங்களில் துவங்கிய சபைகள் ஓங்கி வளர்ந்து செழித்து உண்மையை மறைக்க நினைக்கலாம். கிறிஸ்துவின் வருகையில் அடியோடு பிடுங்கப்பட்டு தீயில் போடப்படுவது நிச்சயம் (மத். 15:13). சத்தியத்தை அறியாமல் அக்கினி ஞானஸ்நானம் வேண்டும் என்று அவர்களே அதில் பிரியப்படுவது வேதனை. சீக்கிரம் உண்மையை உணர்ந்து மனந்திரும்பினால் சொந்த ஆத்துமாவை தப்ப வைக்கலாம்.

 

செடியாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் அதற்குறிய சொந்த கிளைகளாக (கொடியாக) வளராமல்;

Founder, நிறுவனர், தலைவர் என்று சொந்தமாகவே தனி வேர் வைத்து கிறிஸ்துவின் மீது சுற்றிக்கொண்டு எவ்வளவு வளர்ந்தாலும் தோட்டக்காரராபிதாவாகிய தேவன் வேரோடு அறுத்து, களைந்து, பிடுங்கி எரித்துப்போடுகிறார். யோ. 15:1-2

 

நம் வளர்ச்சியானது *கிறிஸ்துவின் அஸ்திபாரத்தில்* வளர்ந்த செடியிலிருந்து கொடியாய் வளர்ந்து இருக்க வேண்டும்.

 

கிறிஸ்து நிறுவிய சபையில் நில்லாமல், மனிதர்கள் துவங்கிய சபைகளில் அங்கத்தினராகி எவ்வளவு செழித்து ஓங்கி வளர்ந்தாலும்; தனி வேர் கொண்ட காட்டுச் செடிக்கு நடந்த முடிவு தான் கடைசியில் சொல்லப்பட்ட அக்கினி ஞானஸ்நானம். லூக்கா 3:16-17

 

அனுதின வசன வாசிப்பு என்று வாசிப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்க்கைத் தரத்தை கிறிஸ்துவின் உபதேசத்தில்மாற்றியமைத்துவிடவேண்டும்.

 

நீங்கள் காட்டுக்கொடியா அல்லது கிறிஸ்துவின் வேரில் வளர்ந்த செடியின் கொடிகளா என்பதை அறிந்து செயல்படுத்தவும்.

 

தேவனுடைய சகல அநுக்கிரகங்களும் உங்களோடு இருப்பதாக !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/mvpyH-TplgM

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக