*விசுவாசத்தின் கிரியை உயர்வை தருகிறது*
by : Eddy Joel Silsbee
பூரண சற்குணராயிருக்கிற பிதாவாகிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் மழையை வருஷிக்கிறவர். (மத். 5:45)
அவர் தீயோர் மீதும் நல்லோர் மீதும் சூரியனை உதிக்கசெய்கிறவர். (மத் 5:45)
அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறவர் (லூக்கா 6:35)
பாவிகளாய் நாம் இருக்கும் போதே, நம்மில் அன்பு வைத்து தனது சொந்த குமாரனை பலியாக்கியவர். (1யோ. 4:9-11)
துரோகிகளுக்கும், விரோதிகளுக்கும், பாவிகளுக்கும், பெலனற்றவர்களுக்கும், அநீதியுள்ளவனுக்கும், சத்துருவுக்கும் அவர் இரங்கினவர். ரோ. 5:6-11
அவர் எல்லோர் மேலும் தயவுள்ளவர் (சங். 145:9)
அவரை போலவே நாமும் பாரபட்சம் இல்லாமலிருக்க வேண்டும் என்பது தேவ குமாரனுடைய கட்டளை (மத். 5:48)
கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றுகிற நாம்;
நமக்குப் பிரியமானவர்களுக்காக மாத்திரமல்ல நம்மை விரோதிக்கிறவர்களையும், நிந்திக்கிறவர்களையும், தூஷிக்கிறவர்களையும், மதிக்காதவர்களையும் மறக்காமல் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்.
எந்த இடத்தில் நம்மை அவர்கள் தாழ்த்தினார்களோ அதே இடத்திலேயே நம்மை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்துவார். அப். 1:8, 4:10-13; 16-21
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக