#1136 - பத்தாம் தலைமுறையிலும் அம்மோனியரும் மோவாபியரும் தேவனுடைய சமூகத்தில் வரலாகாது என்று உபா. 23:3ல் சொல்லியிருக்க மோவாபிய ஸ்திரீயான ரூத் எப்படி இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றிலேயே இடம்பிடிக்கிறார்?*
*பதில்* : சோதோம், கொமோரா, அத்மா மற்றும் செபோயிம் (உபா. 29:23, ஓசியா 11: 8) பட்டணங்கள் பாவத்தினிமித்தம் அழிக்கப்பட்ட பொழுது; நீதியாய் வாழ்ந்த லோத்துவும் அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு குமாரத்திகளும் தேவனால் காப்பாற்றப்பட்டார்கள் (ஆதி. 19:15).
தேவன் இந்த பட்டணத்தை அழிக்கப்போகிறார் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று தனது குமாரத்திகள் விவாகம் செய்யப்போகிற மருமகன்களை லோத்து அந்நேரத்தில் அழைத்த போது அவர்கள் பரியாசமாக்கி உதாசினம் செய்ததால் (ஆதி. 19:14) லோத்துவை தவிர வேறு ஆண் அந்தப் பட்டணங்களிலிருந்து காப்பாற்றப்படவில்லை.
மேலும், பட்டணம் அழிக்கப்படுகையில் தேவதூதர் லோத்துவின் குடும்பத்தை வெளியேற்றிக்கொண்டிருந்த போது லோத்துவின் மனைவி தேவதூதனுடைய வார்த்தைக்கு *அப்படியே* கீழ்படியாமல் சற்று பிசகினதன் நிமித்தம் தனது உயிரை இழந்தார் (ஆதி. 19:17, 26)
மலைக்கு போ என்ற தேவதூதனின் ஆலோசனையை தள்ளி, தனது பார்வைக்கு செழிப்பாயும் நலமாயும் அருகாமையிலும் சின்னதாயும் இலகுவாயும் தோன்றின இடத்திற்கு போக சுய விருப்பமாக ஒரு ஊரை தேர்ந்தெடுத்து அனுமதி வேண்டும் என்று கேட்டு அந்த ஸ்தலத்தையே தனக்கு உரிமையாக்கிக் கொண்டார் லோத்து (ஆதி. 19:19-21)
அதன்பின்னர் அந்த நான்கு பட்டணங்களும் கந்தகத்தினாலும் அக்கினியினாலும் அழிக்கப்பட்டது (ஆதி. 19:24). நான் இந்த இடங்களுக்கு 2016ல் சென்றிருக்கிறேன். இன்றும் இந்த இடங்கள் வனாந்திரமே. எங்கும் உப்பு (கந்தக) கற்கள் தான் காணமுடிகிறது. எந்த புல்லும் பூண்டும் அங்கு துளியும் கிடையாது!!
தேவன் முதலில் கொடுத்த ஆலோசனையே சரி என்று பின்னர் தோன்றியதோ என்னவோ, தான் தேர்ந்தெடுத்த சோவார் என்ற ஊரில் இருக்க பயந்து லோத்து மலைக்கு போய் அங்கு ஒரு குகையில் லோத்து தனது இரண்டு குமாரத்திகளோடு வாசம் பண்ணினார் (ஆதி. 19:30).
நாட்கள் கடந்து செல்ல செல்ல தேவனுடைய ஆலோசனையை கேட்காமல் சுய முயற்சியில் தங்களது தகப்பன் எவ்வாறு தீர்மானம் எடுத்தாரோ அவ்வழியே அவரது குமாரத்திகளும் இப்போது தங்கள் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள சுயமுயற்சியில் இறங்குகிறார்கள். தனது தகப்பனுக்கு மதுவைக் கொடுத்து ஆளுக்கு ஒரு ஆண் மகனை இரு குமாரத்திகளும் பெற்றுக்கொள்கிறார்கள். மோவாப் & பென்னம்மி என்று பெயரிடப்பட்ட அந்த இரு மகன்கள் தான் இந்த மோவாபியர் மற்றும் அம்மோனியர்களின் துவக்கம் (ஆதி. 19:30-38).
இவர்களது தீய பழக்கங்களும் மோசமான வழக்கங்களையும் இஸ்ரவேலர்கள் கற்றுக்கொண்டதன் நிமித்தம் பிற்காலங்களில் இந்த சந்ததியார் இஸ்ரவேலர்களுக்கு எப்போதும் கண்ணியாகவே இருந்தனர். எண். 25:1-3; ரூத் 1:4; 1இரா. 11:1; 1நா. 8:8; எஸ்றா 9:1-2; நெகே. 13:23.
இஸ்ரவேலர்கள் மோவாப் தேசம் வழியாக பிரயாணிக்கக்கூட வேண்டாம் என்று அவர்கள் தேசத்தை தரமாட்டேன் என்றும் சொல்லியிருந்தார். உபா. 2:9
மேலும், உபா. 23:3ல் அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்று சொல்லியிருக்க இந்த கேள்வி உங்களுக்கு எழும்பியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மேலும், மோவாபியப் பெண்ணான ரூத்தின் கொள்ளுப் பேரன் தாவீது அரசனை எவ்வாறு தேவனுடைய சபைக்குள் அனுமதிக்க முடியும்?
முதலாவதாக, "கர்த்தருடைய சபைக்குள் உட்படலாகாது" என்ற சொற்றொடரின் பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அம்மோனியர்கள் அல்லது மோவாபியர்கள் இஸ்ரவேலின் எல்லைக்குள் வாழ முடியாது என்பதையும், பொதுவாக இஸ்ரவேல் சமூகத்தின் ஒரு பகுதியாக மாற முடியாது என்பதையும் அறிவது அவசியம்.
இரண்டாவதாக, இஸ்ரவேலர்களிலும் அதைச் சுற்றியும் பல்வேறு வகையான "புறஜாதியினர்" வாழ்ந்தனர். இஸ்ரவேலின் இரண்டரை கோத்திரத்தினர் யோர்தானின் கிழக்குப் பகுதியில் வசித்தார்கள் (எண். 32). அங்கு மோவாபியர்களும் அம்மோனியர்களும் வாழ்ந்தனர் மற்றும் இஸ்ரவேலர்களும் முகாமிட்டிருந்தனர் (உபா. 1:5; 29:1)
உபாகமம் 23ன் துவக்கத்தில் பார்க்கும் போது மோவாபியர், அம்மோனியர்கள், யூதமார்க்கத்தமையாத விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற அன்னிய அல்லது புறஜாதியினரும் இஸ்ரவேல் சமூகத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதையும் குறிப்பிடுகிறார். உபா. 23:1-2
உபா. 23:3ம் வசனம் ரூத்துக்கும் அவளுடைய சந்ததியினருக்கும் பொருந்தாததற்கு மற்றொரு காரணம், இஸ்ரவேலிலுள்ள ஒரு இஸ்ரவேலரல்லாத தாயுடைய (குறிப்பாக யூதமார்க்கத்தமைந்தவர்!) தேசியத்தை சந்ததியினர் கொள்ளவில்லை.
யோசேப்பின் எகிப்திய மனைவிக்கு பிறந்த மகன்கள் எப்பிராயீம் மற்றும் மனாசேயை எகிப்தியர்கள் என்றழைக்கப்படவில்லை. (ஆதி. 41:50-52).
மீதியானியரான சிப்போராளை மணந்த மோசேக்குப் பிறந்த (யாத். 2:11-25), மகன்களான கெர்சோம் மற்றும் எலியேசர் இஸ்ரவேலர்களாகவே இருந்தனர் (யாத். 2:22; 18:1-4).
எரிகோவின் புறஜாதியான ராகாப்பை இஸ்ரவேலனான சல்மோன் திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த மகன் போவாஸை எரிகோவின் புறஜாதியான் என்று ஆகிவிடவில்லை (மத். 1:5).
போவாஸின் மனைவியான மோவாபிய பெண் ரூத், அவர்களுடைய மகன் ஓபேத், அவர்களுடைய பேரன் ஈசாய், அவர்களுடைய கொள்ளுப் பேரன் தாவீது அல்லது அவர்களுடைய சந்ததிகளான யோசேப்பு மற்றும் மரியாள் இஸ்ரவேலரின் பாரம்பரியக் கணக்கின்படி ஆபிரகாமின் முறையான சந்ததியினரைத் தவிர வேறு எதையும் உருவாக்கவில்லை (மத். 1: 1-17; லூக். 3:23-38).
எரிகோவின் வாரிசாகவோ மோவாபின் வாரிசாகவோ அல்ல, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த இஸ்ரவேலராகவே தாவீது இருந்தார். தாயின் வழியை அல்ல தகப்பனது வம்சத்தையே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ரூத் இனரீதியாக மோவாபியராக இருந்தாலும் மனதளவில் ரூத் கர்த்தருக்கு அர்ப்பணித்து பின்பற்றினார் (ரூத் 1:16-18). மோசேயின் சட்டத்தில் பங்குபெற்று பின்பற்றினார் (ரூத் 3:1-18; 4:1-12; உபா. 25:5-10).
இதனிமித்தம் நாம் கற்றுக்கொள்கிற பாடம் என்பது எப்பேற்பட்ட பாவியானாலும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் போது அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறவர். நாகமானும், கொர்நெலியுவும் மிகப்பெரிய உதாரணங்கள்.
குறிப்பு : சகோ.எரிக் லியொன்ஸ் ஆராய்ச்சிக் கட்டுரையின் சில கருத்துக்களையும் இதில் நான் உபயோகப்படுத்தியுள்ளேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
செவ்வாய், 19 ஏப்ரல், 2022
#1136 - பத்தாம் தலைமுறையிலும் அம்மோனியரும் மோவாபியரும் தேவனுடைய சமூகத்தில் வரலாகாது என்று உபா. 23:3ல் சொல்லியிருக்க மோவாபிய ஸ்திரீயான ரூத் எப்படி இயேசு கிறிஸ்துவின் வம்சவரலாற்றிலேயே இடம்பிடிக்கிறார்?

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக