*அழுதுக்கொண்டே உறங்கினாலும் புதிய விடியல் சந்தோஷமாயிருக்கட்டும்*
by : Eddy Joel Silsbee
மன்னிப்பின் சிகரமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக பிதாவானவர் தமது குமாரனை இவ்வுலகத்தில் அனுப்பி வைத்தார்.
கிறிஸ்துவும், ஒருவரை ஒருவர் மன்னிக்க சொன்னார்.
ஒரு முறை அல்ல, ஏழு எழுபது முறை மன்னிக்கச் சொன்னார்... அதாவது பூரணமாக எத்தனை முறையானாலும் மன்னிக்க சொன்னார்.
தன்னை சிலுவையில் அறைந்த யூதர்கள் மீது தன் பிதாவின் கோபம் மூளாதபடிக்கு தான் சிலுவையில் வேதனையுடன் உயிரைவிடப்போகும் தன்னுடைய கடைசி நிமிடத்தில் கூட தன்னை சிலுவையிலறைந்த அந்த யூதர்களின் மன்னிப்பிற்காக ஜெபம் செய்து நம்மனைவருக்கும் முன்மாதிரியை வைத்து போனார் இயேசுகிறிஸ்து.
சிலுவையே கொடுக்கப்பட்டாலும் எப்போதும், எல்லோரையும் மன்னிப்பது தான் கிறிஸ்தவர்களின் பிரதானமான குணம் !!
அழுதுக்கொண்டே படுத்தாலும்,
புதிய விடியலில் குழந்தை சிரித்துக்கொண்டே எழுவது போல புன்முறுவலோடு புதிய மனுஷனாக ஒவ்வொரு நாளையும் துவங்குவோம்.
அதற்கேற்ற நல்ல சமாதானத்தை தேவன் தருவாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/rFtG0ag_yBs
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக