*ஏழைக்கு இரங்கும் தேவன்*
by : Eddy Joel Silsbee
திக்கற்றவர்களை ஆதரிக்கும் கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
பணக்காரன் கண் ஜாடை காட்டினாலே போதும் அவனது வேலைக்காரர் அவனைப் புரிந்துக்கொண்டு உடனடியாக அவனது வேலையை செய்துவிடுவர்.
ஏழையோ, தன் காரியம் நடப்பதற்கு; கூப்பிட்டு, கும்பிட்டு, கெஞ்சி, இறங்கி, அழுதாலும், போயிட்டு நாளைக்கு வா பார்க்கலாம், அல்லது இரண்டு நாள் கழித்து யோசிக்கலாம் என்று பலநேரம் விடையின்றி அனுப்பிவிடப்படுவர்.
ஆனால், எல்லா வல்லமையும், மகத்துவமும், இராஜாதி இராஜாவுமாயிருக்கிற பரலோகத்தையும் பூலோகத்தையும் மனிதனையும் சர்வத்தையும் படைத்த நம் தேவனோ, உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளுகிறார். சங். 22:24
ஏழையின் குரல் கேட்டு அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். சங். 34:6
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங். 34:17-19
விசுவாசத்தோடு அவரிடத்தில் கேட்போம்.. விண்ணப்பம் நிச்சயம் வாய்க்கும்..
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JDfVxazP3KYEsGbNA0zhBJ
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக