*கிறிஸ்துவை கனப்படுத்திய ஸ்திரீகள்*
by : Eddy Joel Silsbee
அபிஷேகிக்கபட்ட கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து ஒரு ஸ்திரீ, கிறிஸ்து போஜனபந்தியிலிருக்கும்போது, அவர் *சிரசின்மேல்* ஊற்றினாள் என்று மத். 26:7ல் இருக்கிறது.
ஆனால்,
யோ. 12:3ல் மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் *பாதங்களில் பூசினாள்*, என்று பார்க்கிறோம்.
வேதாகமத்தை படிக்கும் போது, முன்னும் பின்னும் படிக்கவேண்டியது அவசியம்...
இந்த அவசர உலகத்தில் எவருக்கும் நேரம் இல்லாமல்,
வேகவேகமாக படித்து விட்டு, இதுவும் அதுவும் ஒன்று தான் என்று ஓங்கி பிரசங்கமும் செய்து விடுகிறார்கள்.
முதல் சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *2 (இரண்டு) நாளைக்கு முன்னர்* நடந்தது. (மத். 26:2)
இரண்டாவது சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *6 (ஆறு) நாளைக்கு முன்னர்* நடந்தது. (யோ. 12:1)
தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்படி, அநுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பத்து வசனம் படித்தாலும், ஆழமாக அதை உணர்ந்து அசைபோட்டு ஜீரணிக்கும்படி படித்துத்தேறுவோம்..
தினமும் வேத வாசிப்பிற்கென்று நீங்கள் ஒதுக்கும் அந்த நேரத்தின் நிமித்தம் வாழ்க்கையில் தேவன் நிச்சயம் உங்களை கனப்படுத்துவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JXGBFhJh76NAzs16b48hnD
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/oHXvDPhKABI
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக