*நிந்திக்கப்பட்டாலும் கடமையைச் செய்*
by : Eddy Joel Silsbee
கரிசனையின் வடிவாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
விடுதலை கிடைக்கும் வகையை தெரிவித்தாலும் (யோ. 8:36) - எப்போதும் அனைவருக்கும் நன்மை மாத்திரம் செய்த இயேசு கிறிஸ்துவை *பிசாசு பிடித்தவன்* என்று சொன்னார்கள் யூதர்கள். (யோ. 8:48)
வார்த்தையின்படியும், கட்டளையின்படியும், சித்ததின்படியும், தன் பிதாவை மகிமைபடுத்துவதாக இயேசு சொன்னபோதும், *அவர் மீது கல்லெறிய தயாரானார்கள்*.. (யோ. 8:59)
தன்னை இப்படி நினைக்கிறார்களே,
தான் சொல்வதை கேட்கவில்லையே,
எதிர்ப்பு இருக்கிறதே என்ற பயமோ, தயக்கமோ, வருத்தமோ இல்லாதபடிக்கு தன் கடமையை செய்யும்படிக்கு *அடுத்த வேளை தானே பிறவிக் குருடனை உற்று நோக்கி*, அவனுக்கு சுகம் அளித்தார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து !! (யோ. 9:1)
சத்தியத்தை பகுத்து பார்க்க மனமில்லாமல்,
அங்கொன்றும் இங்கொன்றும் வசனங்களை எடுத்து,
ஜவ்வு போல மணிக்கணக்காக பிரசங்கத்தில் தங்களது கொள்கையை நிரூபிக்க முயன்றாலும்;
காலமும், வசனமும், தீர்க்கதரிசனமும், தேவனுடைய வார்த்தையும், மாறாதவைகளே.
பரவசத்தில் மூழ்கி சத்தியத்தை இழந்து விடாமல்;
யார் நிந்தித்தாலும், விரோதித்தாலும், எதிர்த்தாலும்,
நம் கடமையை தேவ வார்த்தையின்படி *செய்ய தவறத் வேண்டாம்* !!
கிறிஸ்துவின் பாடமே நமக்கு கொடுக்கப்படுகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக