*ஒரே ஒரு மீறுதல்*
by : Eddy Joel Silsbee
கீழ்படிதலை நமக்கு கற்றுத்தந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சாப்பிடாதே என்ற *“ஒரே ஒரு”* கட்டளை ஆதாமுக்கு கொடுக்கப்பட்டது...
ஏற்றத் துணையிருந்தும் தேவக் கட்டளையை இருவருமே மீறினர் !! (ஆதி. 2:17)
திரும்பி பார்க்காதே என்ற *“ஒரே ஒரு*” கட்டளை லோத்து மற்றும் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்டது...
அவர் மனைவி மீறினார் !! (ஆதி. 19:26)
வாழ்வில் கொஞ்சம் வளர்ந்ததுமே சிறிய விஷயத்திற்கும்;
போராடும் குணமும்,
எதிர்க்கும் குணமும்,
மீறும் குணமும்,
கீழ்படியாமை குணமும்,
சந்தேகக் குணமும்;
வளர்ந்து வாழ்வில் கூடவே ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது.
ஒருவர் மீது மற்றவர் அன்பில் தளைத்து இருந்த போது;
துணைவர் தவறு செய்தால் சுட்டிக்காட்டினதுமே பிடிக்காததைக் களைந்து நல்வழிப்பட்ட காலம் கடந்து துணைவரையே உதாசீனப்படுத்தி வாழ்வது மேன்மையாகவும் தனித்துவமாகவும் பெயர் பெற்றுள்ளது இந்த காலம் !!! குடும்பத்தில் சமாதானமின்மையும் பிரிவினையுமே அதன் விளைவு.
ஒருவரையொருவர் மரியாதை செய்து நம்மை நாமே நிதானித்து, தீங்கானவைகளிலிருந்து விடுபடுவோம்.
சமாதானமும் ஆசீர்வாதமும் குடும்பத்தில் பெருகும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக