*கீழ்படிந்தால் மாற்றம் உண்டு*
by : Eddy Joel Silsbee
நம்மை அதிகமாய் நேசிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்மை ஆதாயப்படுத்துவதற்கென்று தனது சொந்தக் குமாரனையே பலி கொடுத்த பிதாவாகிய தேவனது அன்பை புரிந்து அவருக்கே முற்றிலும் நம்மை ஒப்புக்கொடுத்துக் கீழ்படிந்தால்;
எந்த சூழ்நிலையானாலும் நம்மை அவர் பாதுகாப்பார்:
*கொல்லுவதற்காக* இராணுவ வீரர்கள் சூழ்ந்து வந்தபோதும் கூட, கடைசி நொடியில், ”யூதாவின் ராஜா” என்று அறிந்ததும் கொல்ல வந்தவர்கள் யோசபாத்தை *விட்டு தூர போனார்கள்* (1இரா. 22:32-33)
ஏனென்றால்:
400 தீர்க்கதரிசிகளும் ஆம் இதுவே சரியென்றபோதும்;
*”கர்த்தருடைய* தீர்க்கதரிசனமே தனக்கு முக்கியம்” என்று *கர்த்தரின்* வாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவனுக்கு ஜீவன் கிடைத்தது. 1இரா. 22:6-28
ஆனால்,
தேவவார்த்தைக்கு கீழ்படிவதை விட்டு தனது மனவிருப்பமான ஆஸ்தான விருப்பமானவர்களின் வார்த்தைக்கு கீழ்படிந்து *கர்த்தருடைய வார்த்தைக்கு செவி சாய்க்காததால்*:
ஆகாப் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள, *மாறு வேஷத்தில் இருந்த போதும்*; ஈட்டி அவனை பிளந்து கொன்றுபோட்டது. 1இரா. 22:34-37
நமது வாழ்க்கையின் பழக்கவழக்கத்தை குறித்து வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கர்த்தருடைய வார்த்தையானது கசக்கலாம்;
கிறிஸ்துமஸ், ஈஸ்டர், சாம்பல் புதன், லெந்து நாட்கள், மாதத்திற்கு ஒரு முறை கர்த்தருடைய பந்தி, இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுப்பது, மொழிபெயர்க்கப்படாமல் சபையில் அந்நிய மொழி பேசுவது என்று இப்படி அனைத்தையும் சதா தவறு என்று சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும் நான் விரோதி போன்று தோன்றலாம்;
ஆனாலும், தேவ வார்த்தையை ஒப்பிட்டு பார்த்து தேவ ஊழியர்கள் எடுத்துச் சொல்லும் போது வசனத்தைக் *கேட்பதோடு நில்லாமல், கீழ்படிவோம்*. யாக். 1:22
கையை விட்டுப் போய்விட்டது – காலம் கடந்துவிட்டது என்று நாமே ஒரு முடிவிற்கு வரும் சூழ்நிலையானாலும் நமது தேவைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் சந்திக்கவும் மாற்றவும் சீர்படுத்தவும் வல்லவர் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக