*லாவகமாய் மாற்றின சுயலாபம்*
by : Eddy Joel Silsbee
பராக்கிரமம் நிறைந்த வல்லமையுள்ள சிட்சிக்கும் நமது தேவனுடைய நாமத்திற்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக.
ஒருவன் *மறுபடியும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு கிறிஸ்து. (யோ. 3:3)
ஒருவன் *ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால்* தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் மறுபடியும் (யோ. 3:5)
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, *மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்* நம்மை இரட்சித்தார் என்று பவுல் எழுதுகிறார். (தீத்து 3:5)
விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் *பெற்றவன்* இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் (மாற்கு16:16) என்பதை மாற்கு தனது எழுத்தில் பதிவிடுகிறார்.
இப்பொழுது *நீ தாமதிக்கிறதென்ன*? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள்போகக் கழுவப்படு என்று பவுலை அனனியா துரிதப்படுத்தினார் (அப். 22:16)
இப்படியாக இரட்சிப்பிற்கு ஞானஸ்நானத்தின் அவசியத்தைக் குறித்து ஏராளமான நேரடி வசனங்கள் இருந்தும், எவ்வளவு சொன்னாலும் கேட்க மறுத்து அடம்பிடித்து வேதத்திற்கு முறையாகக் கீழ்படியாமல் ஜனங்கள் இருக்கும் என்பதையறிந்து தான் அன்றே இயேசு கிறிஸ்து *“மெய்யாகவே மெய்யாகவே”* என்று திரும்ப திரும்ப ஊர்ஜீதபடுத்தி சொல்லியிருக்கிறார் போலும் !!
எனது கையை கூட நான் வெட்டிக்கொள்வேனேயன்றி, ஞானஸ்நானம் ஒரு போதும் எனது வாழ்வில் எடுத்துக்கொள்ளவே மாட்டேன் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பிரிவுகளில் பலரது மனதில் இப்படிப்பட்ட விசுவாச விரோதமானது வைராக்கிய விஷமாகிவிட்டது...
மறுபடியும் பிறவாவிட்டால் அதாவது ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் அதாவது ஞானஸ்நானம் எடுத்து இரட்சிக்கப்படாவிட்டால் தேவ ராஜ்ஜியத்தை காணமுடியாதென்று வேதாகம் தெளிவுபடுத்தியுள்ளது.... இந்த வாக்கியத்தைக்கூட லாவகமாக ஒரு தோசையைத் திருப்பிப் போடுவது போல தங்களுக்கு சாதகமாக பிரட்டி ”இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்” என்று மாற்றி மக்களை தங்களது வலையில் விழவைத்தும் வெற்றிக்கண்டுள்ளார்கள் !!
சுயக் கொள்கையை அல்ல – வேத வசனத்தைக் கவனமாய் நிதானித்து இடுக்கமான இவ்வாசல் வழியே உட்பிரவேசிப்பது அவசியம்.
இதை எடுத்துச் சொல்கிற மனுஷன் குற்றஞ்சாட்டப்பட்டால் அந்த மனுஷன் பாக்கியவான் (1பேதுரு 3:14-17, கலா. 4:16) என்னும் பாக்கியத்தை நான் சில குடும்பங்களிலிருந்து பெற்றிருக்கிறேன்.
ஆனாலும், என்றாவது ஒருநாள் அவர்களும் இரட்சிப்பிற்குள் வரும்படியாக என் நினைவில் வரும்போதெல்லாம் ஜெபிக்கிறேன்...
சத்தியத்திற்கு கீழ்படியத்தக்கதாக, கண்களையும் மனதையும் தேவன் தாமே திறப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/L7yMaK6aONb0GEyBU14E8f
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/NnzC7toMqyo
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக