*வேலை சரியாக அச்சுக்கு ஏற்ப இருக்க வேண்டும்*
by : Eddy Joel Silsbee
சகலத்தையும் நன்மையாய் நடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எஜமானன் இல்லையென்றால், வேலைக்காரனுக்கு வேலை இல்லை.
எஜமானன் வேலை சொல்லாவிட்டால், ஊழியனுக்கு அடுத்த கடமை என்னவென்று தெரியாது.
கொடுத்த வேலையை செய்யாத பட்சத்தில், எஜமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்..
மேலும், எஜமான் கட்டளையை வேலையை *அதன்படியே அவ்வாறே* செயல்படுத்தாவிடில், செய்த வேலையை சரிபார்க்கும் பட்சத்தில் அவரது கோபம் நம்மை தண்டிக்கும்.
இரும்பு வேலையானாலும் சமையலானாலும் – எது முதலில் எது பிந்தையது என்பதையறிந்து செயல்படுத்தவில்லையெனில் முடிவு எதிர்பார்த்தது போல வராது.
எஜமானனுக்கு எதுவும் தெரியாது – நான் செய்வது தான் சரியென்று முதலாளிக்கு ஆலோசனை கொடுக்கத் துவங்கினால், சீக்கிரம் அந்த ஊழியக்காரனின் வேலை பறிபோகும் !
கடவுள் பயமில்லாத முதலாளியானாலும் அவனுக்கும் உத்தமமாக இருந்தாலேயன்றி இருக்கும் வேலையைத் தக்க வைக்கமுடியாது. எந்த வேலையையும் எஜமான் சொல்லுக்கு கீழ்படிகிறோம் என்பதைக் காட்டிலும் தேவக்கட்டளைக்கு கீழ்படிந்தே அந்த வேலையைச் செய்கிறோம் என்ற நினைவு இருத்தல் வேண்டும் என்கிறார் அப். பவுல். கொலோ. 3:22
குறிப்பாக, கிறிஸ்தவராகவும் தேவனுக்கு பயந்தவராகவுமுள்ள எஜமானைக் கொண்டுள்ள வேலைக்காரர்கள் கிறிஸ்துவிற்குள் தங்களது எஜமான் ஒரு சகோதரன் என்பதால் இன்னும் கூடுதலாக உழைக்கவேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார். 1தீமோ. 6:2
அது போலவே, கிறிஸ்தவர்களாகிய நாமும் தேவ ஊழியர்கள் என்பதை மனதில் கொண்டு எப்போதும் நம் எஜமானாகிய கிறிஸ்து சொன்னவைகளை அப்படியே அச்சுஅசலாக பின்பற்றாவிடில் நமது அழைப்பும் வேலையும் பறிபோகும். எபே. 6:9; 1கொரி. 1:2; பிலி. 2:10-11, தீத்து 2:10
நன்றாக அல்லது சரியாகத்தான் வேலை செய்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் சுய இஷ்டத்திற்கு செய்துக்கொண்டேயிருந்தால் அதன் பலனை நியாயத்தீர்ப்பில் வேறுவிதமாக நம்மீது வந்து விழுவதைக் கேட்க நேர்ந்தால் – சர்வமும் நாசம் !! ஆகவே, வசனத்தை அப்படியே முறையாய் பற்றிக்கொள்வது நமக்கு அவசியம். 1பேதுரு 2:18
அவருடைய சித்தத்தையே செய்வோம். அவருடைய வசனத்தின்படி அப்படியே அச்சு பிறழாமல் செய்வோம்..
நமக்கு நன்மையையும், சமாதானத்தையும் நமது பணிக்கான பலனையும் நிச்சயம் ஏற்றவேளையில் தருவார்.
சங். 123:2 … எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக