செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

கிறிஸ்துவினிடமிருந்து பாவமன்னிப்பு பெற பாதயாத்திரையா?

*கிறிஸ்துவினிடமிருந்து பாவமன்னிப்பு பெற பாதயாத்திரையா?*

by : Eddy Joel Silsbee

 

ஜீவனுள்ள தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

என்றாவது ஒரு நாள் இரட்சிப்பை புரிந்து கொண்டு தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம் ஆண்டவர், ஒவ்வொருவரின் இருதய கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கிறார். (வெளி. 3:20)

 

தன்னை அடையாளம் கண்டு, ஏற்கவேண்டுமேயென்று, அனைத்தையும் படைத்த கடவுள் நமது சொந்த இதயத்தின் வாசலிலேயே காவல் காத்துக்கொண்டிருப்பதை மறந்து;

*கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு* சுய கற்பனையில் மனிதனால் உருவாக்கப்பட்ட உருவங்களை காணும்படி கால்நடையாய் ஆயிரமாயிரம் மைல்கள் நடக்கவேண்டுமென்று நமது வேதாகமம் சொல்லவில்லை.

 

தலை முடியையோ, கோழி இரத்தத்தையோ, சாராயத்தையோ, ஆட்டு பிரியானியையோ, மனித பலியையோ கொடுத்து பரலோக இரட்சிப்பை எவ்வளவு கோடி கொட்டிக்கொடுத்தாலும் விலைக்கு வாங்கவே முடியாது.

 

*ஏன் இரட்சிப்பை விலை கொடுத்த வாங்க முடியாது?* 

ஏனென்றால், இரட்சிப்பிற்கு எவருமே விலையை நிர்ணயிக்க முடியாது !! பிதாவாகிய கடவுளே, வார்த்தையானவரை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவரது பரிசுத்தமான இரத்தத்தை கொண்டு நிர்ணயித்தார். யோ. 3:16-17

 

*ஏன் இரத்தத்தால் வாங்கவேண்டும்?*

இரத்தத்திற்கு எவரும் விலை நிர்ணயிக்கமுடியாது.

அதில் உயிர் இருக்கிறது என்றும், அதை சாப்பிடக்கூடாதென்றும் அதை தரையிலே ஊற்றிவிடவேண்டும் என்ற கட்டளை உள்ளது. உபா. 15:23, அப். 15:20

 

*ஏன் விலையை நிர்ணயிக்க முடியாது?*

உயிரை எவரும் உருவாக்கமுடியாது. அந்த உயிர் இரத்தத்தில் இருப்பதால் அதற்கு விலையை எந்த கொம்பனும் நிர்ணயிக்கமுடியாது. ஆதி. 9:4 லேவி. 17:11

இரத்தம் ஜீவனுக்கு சமானம். லேவி. 17:14

 

பாவமன்னிப்பிற்காக நியாயபிரமாணத்தின்படி, இரத்தம் சிந்தப்பட்டது. லேவி. 17:11

 

அந்தப்படி, நியாயபிரமாணத்தை சிலுவையில் நிறைவேற்றி, தன் விலைமதிப்பில்லா பரிசுத்தமான இரத்தத்தால் இயேசு கிறிஸ்து நமக்காக பாவமன்னிப்பை பிதாவினிடமிருந்து வாங்கினார். மத். 27:4, 26:28, எபி. 9:18-28

 

மனிதனிடமிருந்து பிரயாசத்தையும், பணத்தையும், தலைமுடியையும், இரத்தத்தையும், அவனது சரீரகீறலையும், முதுகில் கொக்கி மாட்டிக்கொண்டு தேர்இழுக்கும் திறமையையும், பட்டினியையும் பெற்று கடவுள் தனது இரட்சிப்பை விலைக்கு விற்கும் வியாபாரமாக அல்ல, எவ்வித விலையையும் நிர்ணயிக்கமுடியாத விலையேறப்பெற்ற விலையில்லா இரட்சிப்பையே நமக்கு இலவசமாக தந்தார்.

 

வாழ்நாள் முழுக்க சம்பாதித்த தொகையை கொடுத்தாலும் - பரலோகத்தில் ஒரே ஒரு சென்ட் நிலத்தை எவராலும் வாங்கி விட முடியுமோ?

 

அனுமதியில்லாமல் இருதயத்தில் நுழைந்து அலைக்கழிப்பது கடவுள் அல்ல அந்த வேலையைச் செய்தது சாத்தான். ஆண்டவரோ, உங்கள் அனுமதிக்காக எப்போதும் காத்து நிற்பார் !!

 

கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து ஞானஸ்நானம் பெறும்போது, பாவத்திலிருந்து நம்மை மீட்டு அதுவரை செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு இரட்சிப்புக்கு உள்ளாகிறோம். (மாற்கு 16:16)

 

இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் *என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்*, அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம் என்றார் – யோ. 14:23

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/iVARCyfPnJQ

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக