திங்கள், 21 பிப்ரவரி, 2022

வேதத்தை ஒப்பிட்டு பார்த்தால் அநுதின தெளிவு

*வேதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அநுதின தெளிவு*

by : Eddy Joel Silsbee

 

நம்மை பரிசுத்தபடுத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தான் சுத்தமுள்ளவன் என்றும்,

சகலத்தையும் பிரமாணத்தின்படியே செய்கிறவன் என்றும் சொல்லிக்கொண்டு இருந்ததாலே,

*இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே அருகாமையில் இருந்தும்கூட* சுய தவறுகளை உணராதபடிக்கு;

*பரிசேயராகவே பலர் காலம் கடத்திவிட்டனர்* அவரைச் சுற்றியிருந்த பரிசேயர்கள்.

 

அப்படிப்பட்ட சூழ்நிலை தற்போதும் தொடர்கிறது:

 

- வாசிக்கும் வேத வசனத்திற்கு *சொந்த* புரிதலும்,

 

- வயதானவரோ அல்லது தனக்கு விருப்பமுள்ளவர் தனது இஷ்டதிற்கு அவ்வசனத்தை வளைத்து எதைச் சொன்னாலும் அதுவே சரி என்றும் அதுதான் சரியான விளக்கம் என்றும்,

 

- வேதம் நம்மை தெளிவாக எச்சரித்தாலும், நமது கொள்கையை விட்டு விக்கூடாதென்றும்,

 

- காலாவதியானால் என்ன, இன்றும் பின்பற்றுவதில் தவறில்லை என்றும்,

 

இப்படிப்பட்ட சுய கற்பனைகளினால் - வேதத்தின் நிதர்சன உண்மையை ஏற்க மறுத்து விட நமது வாழ்க்கையில் இடமளிக்கக் கூடாது.

 

ஒவ்வொரு நாளும் வேதத்துடன் ஒப்பிட்டு நிதானிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

 

அனுதின வேத வாசிப்பை கடமைக்கென்று படிக்காமல், *ஒப்பிட்டு பார்க்க* படிப்போம்.

 

அப்போது மாத்திரமே தினம் தினம் தெளிவு வரும்.  நீதி. 20:9, கலா. 4:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/vAelyJcC_10

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக