ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கிரியையின் பலன்

*கிரியையின் பலன்*

by : Eddy Joel Silsbee

 

நமது பிரயாசத்தின் பலனை நமக்களிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எவ்வளவு தான் உண்மையாயிருந்தாலும்,

அநியாயம் பண்ணுகிறவன் செழிப்பாய் வாழ்கிறான் என்று ஒரு நாளும் நாம் நினைத்து விட வேண்டாம்.

 

தேவனைச் சேவிப்பதும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதிலும் என்ன பிரயோஜனம்? அகங்காரிகள் சுகமாய் வாழ்கிறார்கள், தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் *தேவனை விரோதித்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று இஸ்ரவேலர் சொன்னபோது கர்த்தர் கடிந்து கொண்டார்*. (மல்கி. 3:13-15)

 

பொல்லாப்பைச் செய்கிறவன் ஜம்மென்று வாழ்கிறானே அவன் கர்த்தரின் பார்வைக்கு நல்லவனாக இருக்கிறானே என்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும் சொல்லும்போது நமது வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறோம். மல்கி. 2:17

 

சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள்,  அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்கி. 4:1

 

துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான். யோபு 21:30

 

கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். நீதி. 16:4

 

கர்த்தர் சொல்கிறதாவது :

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி. 3:8

 

ஆகவே மற்றவர்களைக் குறித்து பொறாமைப் படாமல், *நமது சொந்த செயல்பாட்டில் கவனமாய் இருப்போம்*.

 

நமது கிரியையின் பலனை தேவன் நிச்சயம் தருவார். ஆசீர்வாதம் நம்மைத் தேடிவரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/yhJ0nrp9IAs

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக