சனி, 19 பிப்ரவரி, 2022

டூப்ளிக்கேட் மார்க்கெட்

*டூப்ளிக்கேட் மார்க்கெட்*

by : Eddy Joel Silsbee

 

சத்தியத்தின் தேவனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சொந்த உற்பத்தியாளனே திணறி போகும் அளவிற்கு எது (அசல்) ஒரிஜினல் என்று கண்டு பிடிக்கமுடியாத அளவில் டூப்ளிகேட் பொருட்கள் கடைகளில் இப்போது கிடைக்கிறது.

 

ஆப்பிள் மொபைல் தான் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் கடைக்குப் போனால்;

நீங்கள் கேட்டதை விட
விலைக் குறைவாகவும்
திறனில் மேன்மையாகவும்
பாட்டரி (மின்கலம்) கூடுதல் நேரம் வரும் என்றும்
கேம்ஸ் எல்லாம் நன்றாக விளையாடலாம் என்றும் சொல்லி;
வேறொரு நிறுவனத்தின் மொபைலை விளக்கிச்சொல்லி நம்மிடம் விற்றும் விடுவர்.

 

நாமும் சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்து மற்றவரிடம் புதியதைக் குறித்து பெருமையும் அடித்துக்கொள்வோம். சில காலங்கள் கழிந்த பின்னரே ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினலே என்று உணர்வோம். ஆனால், நஷ்டமோ மீளாது !!

 

அக்கடையிலுள்ள விற்பனையாளர் தனது கம்பெனிக்கு மிகுந்த லாபத்தை தரும்படிக்கு வேறு நிறுவனத்துடன் செய்துக்கொண்ட தனது உடன்படிக்கையை நிலைநிறுத்த பாடுபட்டார். நாமோ, அவரது வாய் ஜாலத்தில் அகப்பட்டு நமது லாபத்தை இழந்தோம்.

 

அவ்வாறே, கிறிஸ்தவம் என்கிற பெயரில் கிறிஸ்தவ மதத்தினர் தங்களது சுய கோட்பாடுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் புதிய புதிய நிறுவனங்களை ஏற்படுத்தி பலபெயர் பலகைகளுடன் வளமாக ஜனங்களிடையே தங்களது வியாபாரத்தை சக்கைப்போடு போட்டு நிலைக்கொண்டு வளர்ந்து கோதுமையைக் காட்டிலும் செழிப்பாயுள்ளது. மத். 13:29; யோ. 15:2

 

யார் உண்மையை சொல்கிறார்கள் யார் தவறானவர்கள் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒருவரை மற்றவர் மிஞ்சி, சத்தியத்தினின்றும் நித்தியபாதையினின்றும் அநேகரை பக்கவாட்டில் இழுத்துவிட்டு தாங்களறியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

 

என் பிதா நடாத நாற்றெல்லாம் பிடுங்கபடும் என்றார் கிறிஸ்து. மத். 15:13

 

*என்னில் நிலைத்திராத* கொடி எதுவோ அது வீணாய்ப்போகும் என்றார் இயேசு. யோ. 15:4

 

வீணானது கடைசியில் *அக்கினியில்* போடப்படும். யோ. 15:6

 

*அக்கினி வேண்டும் என்று அழிவை நாடாமல்* ஆசீர்வாதத்திற்கான கீழ்படிதலை தேட வேண்டும்.

 

சத்தியத்தை விட்டு,

சுய இஷ்ட ஆராதனையில் பிரியம் கொள்ளாமல்,

கிறிஸ்துவின் போதனையை அப்படியே பின்பற்றுவது மிகவும் கடினமே. ஆனால், அதை தான் நாம் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நம் ஆண்டவர் வலியுறுத்தியிருப்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. மத். 7:14

 

கடினமானாலும், சத்திய பாதை மாத்திரமே நம்மை பரலோகம் கொண்டு செல்லும். 2தீமோ. 3:12

 

சத்தியத்தையல்ல டூப்ளிகேட்டையே பின்பற்றினோம் என்பதை *நியாயத்தீர்ப்பில் அறிந்தால் ---- சர்வமும் நஷ்டம்*… !!

 

நாம் கேட்டதும் பின்பற்றுவதுமான எந்தக் கோட்பாடுகளையும் நடைமுறை கிறிஸ்தவ சத்தியத்தில் உள்ளதா என்பதை வேதாகமத்தோடும் நம் வாழ்க்கையோடும் ஒப்பிட்டு பார்த்தால்

நேர்த்தியானது வாய்க்கும்.

 

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,  நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். எபே. 5:15-17

 

தன் சீஷர்களை இயேசு கிறிஸ்து ஜனங்களுக்குள்ளே அனுப்பும் போது : ஓநாய்கள் மத்தியில் அனுப்புகிறேன். வினாவுள்ளவர்களாகவும் கசப்பற்றவர்களாகவும் இருக்க சொன்னார்.

 

*ஜனங்களை ஆதாயப்படுத்த நமக்கு இந்த இரண்டும் மிக மிக மிக அவசியம்*. மத். 10:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/chYG-5xZpnA

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக