வியாழன், 10 பிப்ரவரி, 2022

யேகோவா யீ-ரே

 

*யேகோவா யீ-ரே*

by : Eddy Joel Silsbee

 

எப்போதும் நம்மை விசாரிக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா யீ-ரே*

ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' yir-eh'

 

தமிழ் அர்த்தம் : கர்த்தர் பார்த்துக் கொள்வார்

 

வேதாகமத்தில் ஒரே ஒரு முறை அதுவும் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே இந்த வார்த்தையைக் காண முடிகிறது !!  ஆதி. 22:14

 

யேகோவா-யீரே என்பது மோரியா மலைக்கு ஆபிரகாம் வழங்கிய அடையாளப் பெயராகும். இது அவரது மகனின் உடனடி பலியிடுவதற்கு மாற்றாக ஈசாக்கின் பலியில் தேவனின் பரிந்துரையை நினைவூட்டுகிறது.

 

வாழ்வின் எந்த சூழ்நிலைக்கும் நாம் நிலை குலைந்து போக வேண்டியதில்லை.

 

*பொறுமையாய் மாத்திரம் இருங்கள் – கர்த்தர் பார்த்துக்கொள்வார்*.

 

நமது தேவைகளும் சங்கடங்களும் சிரமங்களும் கஷ்டங்களும் துன்பங்களும் வியாதிகளும் எதுவானாலும் – தேவன் பார்த்துக்கொள்வார் என்று நாம் தைரியமாய் இருப்போம்.

 

தேவனாலே எல்லாம் கூடும் (மத். 19:26)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/F3GrYVjqcN4

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக